India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 7 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தலா 6 செ.மீ. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 5 செ.மீ. செங்குன்றம், காட்பாடி, திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

EVM வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என எலான் மஸ்க் தெரிவித்ததை சுட்டிக்காட்டி, ராகுல் உள்ளிட்டோர் விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள பாஜக மூத்த தலைவர் ராஜீவ் சந்திரசேகர், மஸ்க் தெரிவித்தது இந்திய EVM இயந்திரங்களை பற்றி அல்ல, அமெரிக்க இயந்திரங்களை, குறிப்பாக பியூர்டோ ரிக்கோவில் உள்ள இயந்திரங்களை குறிப்பிட்டுதான் கூறியுள்ளார் எனத் தெரிவித்தார்.

மேற்குவங்கத்தில் நடந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி உருக்கமாக கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும், விபத்து நடந்த இடத்திற்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருவரின் சம்மதத்தோடு காதல் திருமணம் யார் செய்து வைத்தாலும் அதில் தவறில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். காதல் திருமணத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என்ற அவர், காதல் திருமண விவகாரத்தை சாதிய ரீதியாக யாரும் கொண்டு செல்லக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக, காதல் திருமணம் செய்து வைத்ததால், நெல்லை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் சூறையாடினர்.

தண்ணீர் பிரச்னை தொடர்பாக டெல்லி அரசுக்கு எதிரான பாஜகவின் போராட்டம் குறித்து ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் விமர்சித்துள்ளார். டெல்லி மக்களுக்கு தண்ணீர் கிடைக்க கூடாது என்று பாஜக விரும்புவதாக குற்றம் சாட்டிய அவர், இந்த காரணத்திற்காகவே போராட்டம் ஊக்குவிக்கப்படுவதாகக் கண்டனம் தெரிவித்தார். தண்ணீரை வைத்து அரசியல் செய்யலாம் என்ற பாஜகவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது எனவும் அவர் கூறினார்.

கார் விபத்தில் இருந்து குணமாகி ஐபிஎல்லில் களமிறங்கிய பண்ட், கீப்பிங், பேட்டிங்கில் அசத்தினார். சாம்சனும் கீப்பிங், பேட்டிங்கில் அபாரமாக செயல்படவே, 2 பேரும் டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டனர். எனினும், பண்ட் மட்டுமே 11 பேர் அணியில் இடம்பெற்றார். கோலி போன்றோர் சொதப்பும் நிலையில், பண்ட் தன்மீதுள்ள நம்பிக்கையை நிருபிக்கும்வகையில் 3 போட்டிகளில் 36, 42, 18 என 96 ரன் குவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டியளிக்கையில் புள்ளி விவரங்களை நடுக்கத்துடன் வெளியிடுவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அதிமுக சார்பில் சொந்தமாக பேசி சமூகவலைதளங்களில் அவ்வப்போது அவர் வீடியோ வெளியிட்டு வருகிறார். இதைப் பார்க்கும் அதிமுகவினர், அவர் என்ன சொல்கிறார் என தங்களுக்கு புரியவில்லை, உங்களுக்காவது புரிகிறதா என அருகில் இருப்போரிடம் கேட்பதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் தமிழ்நாடு 4.57% (10.10 மில்லியன் டன்) பங்களிப்பை வழங்கி சரித்திர சாதனை படைத்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று ஆவின் நிறுவனம் சிறந்து விளங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பால் அட்டைகள் மூலம் குறைந்த விலையில் பால் விநியோகம் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பையில் இன்று நியூசிலாந்து vs பப்புவா நியூ கினியா அணிகள் மோத உள்ளன. இதுவரை 3 போட்டியில் விளையாடியுள்ள நியூசிலாந்து, 1 வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகளை பெற்று சி பிரிவில் 3ஆவது இடத்தில் உள்ளது. பப்புவா நியூ கினியா அணி தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. இரண்டு அணிகளுமே தொடரில் இருந்து ஏற்கெனவே வெளியேறியுள்ளதால், இந்த ஆட்டம் சம்பிரதாய போட்டியாகவே இருக்கும்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, சிஐடி போலீசார் முன்பு இன்று ஆஜரானார். எடியூரப்பா மீது 17 வயது சிறுமி பாலியல் புகார் தெரிவித்ததால், அவர் மீது போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கைதுக்கு எதிராக 17ஆம் தேதி வரை இடைக்கால தடை பெற்றுள்ளார்.
Sorry, no posts matched your criteria.