News June 17, 2024
தமிழகத்தில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 7 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தலா 6 செ.மீ. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 5 செ.மீ. செங்குன்றம், காட்பாடி, திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
Similar News
News January 21, 2026
தேர்வு கிடையாது.. ₹25,000 சம்பளம்: APPLY HERE

ஆதார் மையங்களில் சூப்பர்வைசர்/ ஆபரேட்டர் பிரிவுகளில் காலியாகவுள்ள 282 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th, 12th, ITI. தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. சம்பளம்: ₹25,000 முதல் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜன.31. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News January 21, 2026
கோலியை பாலோ பண்ணுங்க: கவாஸ்கர்

இளம்வீரர்கள் கோலியின் ஆட்ட பாணியை பின்பற்றி விளையாட வேண்டும் என Ex கிரிக்கெட்டர் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய அணி ODI தொடரை இழந்தது. 3-வது போட்டியில் ஒற்றை ஆளாக ரன்கள் குவித்த கோலி குறித்து பேசிய கவாஸ்கர், இன்னிங்ஸை நிதானமாக கட்டமைத்து பின்னர் ரன் குவிப்பில் கவனம் செலுத்தும் அவரின் ஆட்டத்தை இளம் வீரர்கள் பாடமாக எடுத்து கொண்டு பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
News January 21, 2026
NASA-ல் இருந்து சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார்

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(60) NASA-ல் இருந்து ஓய்வு பெற்றார். 3 முறை விண்வெளிக்கு பயணித்துள்ள அவர், மொத்தம் 608 நாள்கள் அங்கு கழித்தார். மேலும், 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளி நடைப்பயணங்களையும் (9 முறை) அவர் மேற்கொண்டுள்ளார். 1998-ல் NASA-ல் சேர்ந்து 27 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். டிசம்பர் 27-ம் தேதியுடன் அவர் ஓய்வு பெற்றுள்ளதாக NASA அறிவித்துள்ளது.


