India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழில் வெற்றி பெற்ற பழைய படங்களை, மீண்டும் ரிலீஸ் செய்யும் டிரெண்ட் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2010ஆம் ஆண்டில் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா- சந்தானம் நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படம் வரும் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
2019 மக்களவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ரமேஷ், எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை விட 1.43 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2021ல் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதால், திமுகவுக்கு அங்கு அவப்பெயர் ஏற்பட்டது. இதனால் மீண்டும் அங்கு போட்டியிட்டு திமுக வெற்றி பெறுவது கடினம் என்பதால், அத்தொகுதி காங்கிரஸ் வசம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.
திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்த தொகுதியில் வைகோவின் மகனும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால், புதிய சின்னத்தை தேர்வு செய்து அதில் போட்டியிடுவோம் என வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில், வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் காயமடைந்தார். ஐபிஎல் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், CSK வீரர் காயம் அடைந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, (NZ) டெவன் கான்வே, (SL) பத்திரனா ஆகியோர் காயம் காரணமாக அணியில் இன்னும் இணையாமல் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, 3ஆவது வீரரும் காயமடைந்திருப்பது அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.
சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதுதான் தென்காசி தொகுதி. கடந்த தேர்தலில் சுமார் 28 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக திமுக (தனுஷ்) வெற்றிபெற்றது. இந்த முறை அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), பாஜக சார்பில் ஆனந்தன் அய்யாசாமி போட்டியிட வாய்ப்புள்ளதால், திமுகவின் வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது.
நாடு முழுவதும் காலியாக உள்ள 9,144 Technician பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Technician Gr 1 பணியிடத்திற்கு 36 வயதிற்கு உட்பட்டவர்களும், Gr 3 பணியிடத்திற்கு 32 வயதிற்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். கணிணி தேர்வின் மூலம் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். இதற்கு ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு இங்கே <
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘3’. அன்று சுமாரான வெற்றிப்பெற்ற இப்படம் சமீபத்தில் ரீ-ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் பிரான்சில் இப்படம் 2000 டிக்கெட்டுகள் விற்பனையாகி, அதிக டிக்கெட்டுகள் விற்பனையான தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. முன்னதாக பாபா 1000 டிக்கெட்டுகள் விற்பனையானது.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி இன்று மாலை கோவைக்கு செல்கிறார். இந்த நிலையில், தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர், பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜுன் 14இல் அவர் கைது செய்யப்பட்டார். பல முறை அவர் ஜாமின் கோரி நீதிமன்றங்களில் மனுத் தாக்கல்
செய்திருந்த நிலையில், அவரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மக்களவை தேர்தல் பரப்புரை தீவிரமடைய உள்ள நிலையில், தற்போது 2ஆவது முறையாக அவர் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார்.
6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றம் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் உயரதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், குஜராத், உ.பி., பீகார், ஜார்கண்ட், ஹிமாச்சல், உத்தராகண்ட் மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல மேற்கு வங்க டிஜிபியை மாற்றவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.