India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், பேட்டிங் ஆர்டரை மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், ஓப்பனர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மாவை மாற்றக் கூடாது என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். இந்த ஆர்டரை மாற்றினால், 3,4வது இடத்தில ஆடும் வீரர்களும் மாற்றப்படுவார் என்பதால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

ஐஸ்கிரீமில் மனித கை விரல், சாப்பாட்டில் பாம்பு வால் என சமீபகாலமாக இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் பெங்களூருவில் இருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்துள்ளது. பயணியின் புகாரை அடுத்து, அவருக்கு வேறு உணவு வழங்கிய விமான நிறுவனம், இந்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளது.

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மதியம் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு ரயில் பயணிகளின் நலன் குறித்து கவலையில்லை, அவர்களின் கவலையெல்லாம் ஹேக் செய்து தேர்தலில் வெற்றி பெறுவது குறித்துதான் என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். மே.வங்க ரயில் விபத்து குறித்து பேசிய அவர், ரயில்வே ஊழியர்கள் கடுமையான சிக்கலை சந்தித்துள்ளதாகவும், அவர்களுக்கு தான் உறுதுணையாக இருப்பதாக கூறிய அவர், மத்திய அரசுக்கு ரயில்வே ஊழியர்கள் குறித்து அக்கறையில்லை என்றார்.

தமிழகத்தில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். 2 நாள்களுக்கு முன் புதுக்கோட்டையில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கோட்டாட்சியரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளதாக கூறிய அவர், திமுக ஆட்சியில் மணல் கடத்தலை தடுப்பவர்கள் மீதான தாக்குதல் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. ஆனால், தாக்குதல் சம்பவங்களை மக்கள் வெளிச்சத்திற்கு வராதபடி தடுப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது என விமர்சித்தார்.

உணவு சமைக்கும் போது பாத்திரங்களை மூடி வைத்துதான் சமைக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. பெரும்பாலும் இந்தியர்கள் சமைக்கும் போது பாத்திரங்களை மூடி வைக்காமல்தான் சமைப்பார்கள். ஆனால், அப்படி மூடி வைக்காமல் சமைக்கும் போது, உணவு வேக நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதோடு, உணவின் மீது காற்று பட்டு அதிலுள்ள சத்துக்கள் குறைந்து விடும் என்று காரணம் கூறப்படுகிறது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாததால், அக்கட்சித் தொண்டர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் திமுகவுக்குதான் வாக்களிப்பார்கள் என்றும் அதனை சிதறாமல் பெற வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆன்லைன் வழி பணப்பரிமாற்றம் செய்வதில் இந்தியா வேகமாக முன்னேறியுள்ளது. ஆன்லைன் வணிக தளங்களில் பணமில்லா பரிவர்த்தனை 2018ஆம் ஆண்டு 20.4%ஆக இருந்தது. இது 2023ஆம் ஆண்டு 58.1%ஆக உயர்ந்துள்ளதாக ‘குளோபல் டேட்டா’ என்ற ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, UPI, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

போப் பிரான்சிஸ்-பிரதமர் மோடி சந்திப்பு தொடர்பான X பதிவுக்கு, கேரள காங்கிரஸ் மன்னிப்பு கோரியுள்ளது. G7 மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக இத்தாலி சென்ற மோடி, அங்கு போப் பிரான்சிஸை சந்தித்தார். இதனை, ’கடைசியாக கடவுளை சந்திக்கும் வாய்ப்பு, போப்புக்கு கிடைத்ததாக’ கேரள காங்கிரஸ் விமர்சித்திருந்தது. இதன் மூலம் கிறிஸ்தவர்கள் இழிவுபடுத்தப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டிய நிலையில், பதிவு நீக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று காலை 9 மணிக்கு கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக அவ்வழியாக இயங்கும் 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹவுரா – நியூ ஜல்பைகுரி வந்தேபாரத், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ், தாம்பரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.