News June 20, 2024

கல்யாணராமன் பாஜகவில் இருந்து நீக்கம்

image

தமிழக பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த திருச்சி சூர்யா நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, சிந்தனையாளர் பிரிவின் மாநிலப் பார்வையாளர் கல்யாணராமன் அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓராண்டுக்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத் தலைமை பற்றி ஆதாரமன்றி அவதூறு பரப்பியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News June 20, 2024

காலையில் எழுந்ததும் மறந்தும் இதை செய்து விடாதீர்கள்

image

காலையில் எழுந்ததும் சிலவற்றை மறந்தும் பார்க்கக் கூடாதென ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அதாவது, காலையில் எழுந்ததும் நிழலை பார்ப்பது அசுபமாக கருதப்படுகிறது. இதேபோல், காலையில் எழுந்ததும் கழுவாத பாத்திரங்களை கண்டால் அது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இது பொருளாதார சிக்கலுக்கும் வழிவகுக்கும். காலையில் எழுந்தவுடன் உடைந்த சிலைகளைக் கண்டால், பிரச்னைக்கு வழிவகுக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

News June 20, 2024

இந்தியா-ஆஃப்கான் இன்று மோதல்

image

T20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் இன்று, இந்தியா-ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நடப்பு உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில், Bridgetown மைதானத்தில், இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள போட்டியில் IND-AFG பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் விளையாடி அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி, ஆஃப்கானை வீழ்த்தி இன்றைய போட்டியில் வெல்லுமா?

News June 20, 2024

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் அம்சம்

image

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. 2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் கூடியது. அப்போது, ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்க மறுத்தார். அதைத் தொடர்ந்து தற்போது 2வது முறையாக கூடும் இந்தக் கூட்டத்தில் நீர்வளம், உயர்கல்வி, நெடுஞ்சாலை, காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற உள்ளன. ஜூன் 29இல் முதல்வர் ஸ்டாலின் உரையுடன் கூட்டத்தொடர் நிறைவடைகிறது.

News June 20, 2024

முறைகேடு புகார் எதிரொலி; யுஜிசி நெட் தேர்வு ரத்து!

image

தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. உதவிப் பேராசிரியர் & இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்காக தகுதியைத் தீர்மானிப்பதற்காக நடைபெற்ற நெட் தேர்வு இந்தாண்டு OMR சீட் முறையில் நடைபெற்றது. அதில், முறைகேடுகள் நடந்ததாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்ததையடுத்து, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

News June 20, 2024

ரத்து செய்யப்பட்டது NEET தேர்வு அல்ல…

image

மத்திய கல்வித் துறை அமைச்சகம் UGC NET-2024 தேர்வைதான் ரத்து செய்துள்ளது. முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக பலரும் குழம்பியுள்ளனர். அதாவது NET-க்கு பதிலாக NEET என நினைக்கின்றனர். தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்பட்ட NET தேர்வு உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்பட்டது. NEET தேர்வு மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படுகிறது. மாணவர்கள் தெளிவுப்பெற இதை பகிருங்கள்.

News June 20, 2024

கருப்பட்டி காபி அருந்தினால் இத்தனை நன்மைகளா?

image

காலையில் கருப்பட்டி காபியை தொடர்ந்து பருகுவதால், ஏராளமான பயன்கள் கிடைப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கருப்பட்டி காபியில் சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவை, உடலுக்கு சக்தியளிப்பதோடு, எலும்புகள், பற்களை உறுதிபடுத்தும். கருப்பட்டி காபியை தொடர்ந்து குடித்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும்.

News June 20, 2024

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

image

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ளது. முதல் நாளான இன்று மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தியதும் அவை ஒத்திவைக்கப்படும். நாளை காலை கேள்வி நேரத்துடன் அலுவல் தொடங்கவுள்ளது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். இதில், கள்ளக்குறிச்சி மரணம், காவிரி விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 20, 2024

கள்ளச்சாராயம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு பலி எண்ணிக்கை 16ஆக இருந்த நிலையில், தற்போது 29ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

News June 20, 2024

234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: இபிஎஸ்

image

2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 5 ஆண்டுகால ஆட்சியில் இருமுறை கூட்டுறவு கடன் & பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறினார். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த வரலாற்றுப் பெருமை அதிமுகவுக்கு உண்டு என்றார்.

error: Content is protected !!