India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய வாக்கு மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எஸ்டிபிஐ மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகள் அதிமுகவிற்கும், மமக, மஜக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணிக்கும் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில், ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழக புதிய விடுதலை கட்சியின் மாநில தலைவர் காஜா மொய்தீன் திமுக – காங்., கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 2022-23ல் 59,000 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 9,551 திருமணங்கள் சட்ட ரீதியாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 49,813 திருமணங்கள், கவுன்சிலிங், விழிப்புணர்வு மூலம் தடுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பீஹாரில் 31% சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 4ல் 1 திருமணங்கள், 10-14 வயது சிறுமிகளுக்கு நடக்க இருந்தவை.
தமிழ்நாட்டில் அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு வெப்பம் தகிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்திய வானிலை மைய விஞ்ஞானி நரேஷ் குமார் கூறுகையில், “கேரளா, தமிழ்நாடு, கடலோர ஒடிஷா, கடலோர ஆந்திரா பகுதிகளில் 4 – 5 நாள்களுக்கு வெப்பம் தகிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும். ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை வீசக்கூடும்” என்றார்.
நடிகர் விஜய்யின், ‘The G.O.A.T’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டி.வி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்துக்குக் கொடுத்த விலையையே இந்தப் படத்திற்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் எதிர்பார்த்ததாம். ஆனால், சன் டி.வி தரப்பில் ₹50 கோடி மட்டுமே தர முடியுமென உறுதியாக வியாபாரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேறு வழியில்லாமல், சன் டி.வி சொன்ன விலைக்கே ஏ.ஜி.எஸ் படத்தைக் கொடுத்திருக்கிறது.
உரிய வருமான வரி செலுத்தவில்லை எனக் கூறி, காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை ₹1800 கோடி அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பியது. இதற்காக காங்கிரசின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் இருந்த ₹135 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
சேலம் அக்ரஹாரம் கடை வீதியில் நடைபயணமாக சென்று, திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்போது சாலையோர தேநீர் கடையில் முதல்வர் தேநீர் அருந்தினார். அப்போது பொதுமக்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து உற்சாகமடைந்தனர். செல்ஃபி போஸ் கொடுத்தாலும், அவர்களிடமும் வாக்கு கேட்க ஸ்டாலின் மறக்கவில்லை.
‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அத்தகைய கண் திருஷ்டிகளை கழிக்கும் ஆற்றல் திருமண்ணுக்கு உண்டாம். ‘ஓம் நமோ நாராயணாய’ என்று சொல்லி நெற்றியில் திருநாமம் இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.
20 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க இந்தியா தகுதி பெற்றுள்ளது. உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 16 இடங்களில் உள்ள நட்சத்திரங்கள் மட்டும் தான் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க முடியும். இதில் பிரனாய் (9), லக்சயா (16) ஆகிய இரு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக கடந்த 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் அபின் ஷ்யாம், நிகில் கனேட்கர் என இரு வீரர்கள் பங்கேற்றனர்.
திருவான்மியூரில் தனது குடும்பத்தினருடன் வசித்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு இரவு 1 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை குடும்பத்தினர் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு சற்றுநேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ஓட்டேரி அரசு மின் மயானத்தில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
225 மக்களவை எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆய்வு செய்தது. அதில் 225 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதும், அதில் 29% பேர் மீது கொலை, கொலை முயற்சி, இனக் கலவரம் தூண்டியது, கடத்தல் என கடுமையான வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.