News July 14, 2024
ஜெகநாதர் கோயில் கருவூலம் கணக்கிடப்பட்ட வரலாறு

பூரி ஜெகநாதர் கோயில் கருவூலம் 46 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு கருவூலம் திறக்கப்பட்டு, அதில் இருந்த பொக்கிஷங்கள் எண்ணப்பட்டன. இந்த கணக்கெடுப்பு பணிகள் 70 நாள்கள் நடைபெற்றது. அதில், 128.38 கிலோ எடையுள்ள தங்கம், 221.53 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து, 1982 மற்றும் 1985ஆம் ஆண்டு கருவூலம் திறக்கப்பட்டது. ஆனால், ஆபரணங்கள் எண்ணிப்படவில்லை.
Similar News
News April 10, 2026
மகளிர் உரிமைத் தொகை.. NEW UPDATE

மாநில அளவிலான அனைத்து நலத் திட்டங்களுக்கும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் பென்சன் உள்ளிட்ட பயனாளிகளின் தரவுகள் சரிபார்க்கப்படும். மகளிர் உரிமைத் தொகை பெற்று வருபவர்கள் வேறு திட்டத்தில் பயனாளிகளாக இருந்தால், அவர்களுக்கு உரிமைத் தொகை நிறுத்தப்படும். அரசின் திட்டங்கள் சரியான பயனாளிகளை சென்றடைவதே இதன் நோக்கம்.
News April 10, 2026
மக்கள்தொகை கணக்கெடுப்பு.. 5.7 லட்சம் குடும்பங்கள் பதிவு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ன் ஒருபகுதியாக சுய கணக்கெடுப்பு ஏப்.1 முதல் தொடங்கியது. இதன்மூலம், பொதுமக்கள் தாங்களாகவே ஆவணங்களை பூர்த்தி செய்து டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். முதல் கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை, 5.72 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். TN-ல் ஜூலை 17, 2026 முதல் தொடங்க உள்ளது.
News April 10, 2026
BREAKING: விஜய் பரப்புரையில் மயக்கம்.. பதற்றம் உருவானது

காரைக்குடியில் விஜய்யின் பரப்புரையை காணச் சென்ற பெண் உள்பட 3 பேர் வெயிலின் தாக்கத்தால் மயக்கம் அடைந்துள்ளனர். இதனால் சிறிதுநேரம் அங்கு பதற்றம் நிலவியது. எனினும், மயக்கம் அடைந்தவர்கள் உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பகல் 12 மணி முதல் 2.30 வரை பரப்புரைக்கு அனுமதி பெற்றிருந்த நிலையில், விஜய் பரப்புரை இடத்திற்கு செல்வதற்கே 2.30 மணிக்கு மேலாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.


