India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் சிக்கி, தலைமறைவாகியுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமின் வழங்க, கரூர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரித்துவரும் நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, தற்போது
அவர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டனில் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயினின் இளம்வீரர் கார்லோஸ் அல்காரஸ் தொடர்ந்து 2ஆவது முறையாக கோப்பையை வென்றார். இதற்கு முன்பு, ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் 2 முறை விம்பிள்டன் கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தார். அவரது சாதனையை தற்போது அல்காரஸ் சமன் செய்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்ற கர்நாடக அரசின் நிலைப்பாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி நீரை திறக்க மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மீறி வருவதாகவும் சாடியுள்ளார். மேலும், விவசாயிகளின் நலனை பாதிக்கக் கூடிய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படையை ஏவியவர் குறித்த பின்னணியை விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். வழக்கில் உள்ள முரண்பட்ட தகவல்கள் குறித்த உண்மை நிலையை அறியவே சிபிஐ விசாரணை தேவை என்று பாஜக வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார். முன்னதாக, காவல்நிலையத்தில் சரணடைந்த ஒருவரை என்கவுன்டர் செய்வது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்றும் அவர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“இந்தியன் 2”க்கு எதிர்மறை விமர்சனம் வந்ததை அடுத்து, “TEENZ” படத்திற்கு மக்கள் படையெடுக்கின்றனர். முதல் நாளில் கூட்டமே இல்லாமல் இருந்த அப்படத்திற்கு மறுநாள் டிக்கெட் கிடைக்காத அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது. இதுகுறித்து பார்த்திபன், மக்கள் திரையரங்கிற்கு வருவதை மட்டும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன். பணத்தை மீறி படைப்பிற்கான அங்கீகாரம் என்னைப் பரவசப்படுத்துகிறது என உருக்கமாக கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலையால் சென்னை பெரம்பூரில் ஒரு வாரமாக பதற்றம் நிலவுகிறது. அவர் கொலை தொடர்பாக அடுத்தடுத்து சிசிடிவி வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அவரது மனைவி பொற்கொடி, ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து சிபிஐ விசாரணை கோரி பிஎஸ்பி சார்பில் மனு அளிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்காக ஆளுநர் அலுவலகத்தில் நேரம் கேட்டு மனு அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனமான BSNL, ஒருபுறம் 4ஜி தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டே, மறுபுறம் வாடிக்கையாளர்களை தக்க வைக்க புதுத் திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி, 395 நாள்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.2,399 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் தினமும் அதிவேக 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ், BSNL Tunes உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது.

அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டியதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை தோல்வியைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரியில் அவரது புகைப்படத்துடன் திமுக பிரமுகர்கள் சாலையில் ஆடு வெட்டினர். இவ்விவகாரத்திற்கு எதிராக பாஜக பிரமுகர் மோகன் தாஸ் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் விசாரணை ஆணையம் தொடர்பான வழக்கில்,
தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பிரமுகர் ராம்குமார் தொடர்ந்த வழக்கில், மரணம் குறித்து புலன் விசாரணை நடத்த, ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு பதில்தர உத்தரவிட்டதோடு, வழக்கையும் 2 வாரம் ஒத்திவைத்தது.

தமிழகத்தில் 4 மண்டலங்களில் ரவுடிகளைக் கண்காணிக்க குழு அமைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அக்குழு, ரவுடிகளுக்குக் கிடைக்கும் பொருளாதார உதவிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், ரவுடிகள் மறுவகைப்படுத்தப்பட்டு காவல்துறையால் தீவிரமாக கண்காணிக்கப்படுவர் என்றும், மீகவும் பயங்கரமான 550 ரவுடிகளை குறிவைத்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.