India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி வால்பாறையில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ₹8.15லிருந்து ₹8.55ஆக உயர்வு
* கிராம பஞ்சாயத்தில் குடிசைகள், தாட்கோ நிறுவனங்களுக்கு மின் கட்டணம் ₹9.35லிருந்து, ₹9.80ஆக உயர்வு
* ரயில்வே மற்றும் ராணுவ குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ₹8.15லிருந்து ₹8.55ஆக உயர்வு
* குடிசை, குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ₹6.95ஆக உயர்வு

* விசைத்தறிகளுக்கு 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ₹7.65லிருந்து ₹8ஆக உயர்வு
* தொழில், ஐடி நிறுவனங்களுக்கான (LT) மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ₹7.65லிருந்து ₹8ஆக உயர்வு
* வேளான், அரசு விதைப் பண்ணைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ₹4.60லிருந்து ₹4.80ஆக உயர்வு
* வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு ₹8.70லிருந்து ₹9.10ஆக உயர்வு

தமிழ்நாட்டில் வீட்டுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தைத் தொடர்ந்து வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட்டுக்கு ₹9.70லிருந்து ₹10.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ வாட்டுக்கான வாடகையும் ₹307லிருந்து ₹322ஆக அதிகரித்துள்ளது. கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பின் நொண்டி நொண்டி நடப்பது போன்ற வீடியோவை இந்திய வீரர்கள் பகிர்ந்திருந்தனர். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், யாரையும் புண்படுத்தும் நோக்கில் இதை பகிரவில்லை என ஹர்பஜன் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இடைவிடாமல் 15 நாள்கள் விளையாடியபின் உடல் அப்படி ஆகிவிட்டதை கூறும் விதமாக அப்படி செய்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

காமராஜரின் 122ஆவது பிறந்தநாளை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். “பாரத ரத்னா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திரு காமராஜரின் பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகள். அயராது உழைத்து சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரை உயர்த்த மற்றவர்களை ஊக்கப்படுத்தியவர். கல்வி தந்தை என்ற அவரது மரபு எப்போதும் நினைவில் நிற்கும்” எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு புதிய அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 0-400 ஒரு யூனிட்டுக்கு ₹4.60இல் இருந்து ₹4.80 காசுகளாகவும், 401 -500 வரை ஒரு யூனிட்டுக்கு 30 காசுகள், 501 – 600 வரை 40 காசுகள், 601-800 வரை ஒரு யூனிட்டுக்கு 45 காசுகள், 1000 யூனிட்டுக்கு மேல் 55 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வந்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ₹1,000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ள இப்படம், 3ஆவது வார ஞாயிற்றுக்கிழமையான நேற்று 2.79 லட்சம் டிக்கெட்டுகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக, சன்னி தியோலின் ‘கதர் 2’ 2.15 லட்சம் டிக்கெட்டுகளை விற்பனை செய்திருந்தது.

ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜியோ பயனாளர்கள் 3 மாத ரீசார்ஜை இலவசமாக பெறுவதற்கு இந்த லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் என்ற ஒரு செய்தி வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஜியோ, பயனாளர்களுக்கு எந்த இலவச ரீசார்ஜையும் வழங்கவில்லை. இந்த செய்தி முற்றிலும் தவறான தகவல், இதுபோன்ற செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.

குளிர்பானங்களை அருந்துவது உடலில் ஹைபோகால்சீமியா எனப்படும் நிலையை ஏற்படுத்தலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் இருப்பதாகவும், இது எலும்புகளில் உள்ள கால்சியத்தை குறைத்து பலவீனமாக்கலாம் எனவும் கூறுகின்றனர். மேலும், அவற்றில் உள்ள காஃபின் மற்றும் செயற்கை சேர்க்கைகள் தூக்கத்தை சீர்குலைத்து உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.