India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனித்து நின்று, அரசியல் அங்கீகாரம் பெறும் திராணி பாஜகவிடம் இருக்கிறதா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “எந்த சின்னத்தை ஒதுக்கினாலும், நான் போட்டியிடுவேன். வெற்றி பெற்று அங்கீகாரம் பெறுவேன். மக்களவைத் தேர்தலில் 8 கோடி மக்களுடன் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். சென்னையில் பேசிய அவர், “ஸ்ரீ பெரும்புதூரில் வி.என். வேணுகோபாலும், ஈரோட்டில் விஜயகுமாரும் போட்டியிட உள்ளனர். தூத்துக்குடி வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார். தமாகா சார்பில் சைக்கிள் சின்னத்தில் நேரடியாக போட்டியிட உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
தேர்தல் பத்திர விவகாரத்தை முன்வைத்து தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அதிமுக பிரசாரம் செய்யுமா என கேள்வி எழுந்துள்ளது. தேசிய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டில் திமுகவும் அதிக நன்கொடை பெற்றுள்ளன. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக தனித்தனி அணிகளாக களம் காண்கின்றன. இந்நிலையில், தேர்தல் பத்திர விவகாரத்தை முன்வைத்து பாஜக, திமுகவுக்கு எதிராக அதிமுக பிரசாரம் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டுள்ளார். அதில், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தி தினக் கூலியாக ரூ.450 வழங்க நடிவடிக்கை எடுக்கப்படும், மாநில அரசின் நிதிச் சுமையை குறைக்க நிதிப்பகிர்வை 75:25 என்று மாற்றி அமைக்க வேண்டும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும், நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ப்ராக் சர்வதேச செஸ் தொடரில் இந்தியாவின் இளம் வீரர் ஆன்ஷ் நந்தன் (11) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். செக் குடியரசில் 6 ஆவது ப்ராக் சர்வதேச செஸ் தொடர் நடந்தது. இதில் எதிர்கால வீரர்கள் பிரிவில் 9 சுற்றில் 7இல் வென்ற ஆன்ஷ் நந்தன் 8.0 புள்ளியுடன் முதலிடம் பிடித்து கோப்பையைத் தட்டிச் சென்றார். அத்துடன் கேண்டிடேட் மாஸ்டர் டைட்டிலைப் பெறவும் ஆன்ஷ் நந்தன் தகுதி பெற்றிருக்கிறார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு விருதுநகர், கடலூர், மத்திய சென்னை, திருவள்ளூர், தஞ்சை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், மத்திய சென்னையில் தயாநிதி மாறனை எதிர்த்து தேமுதிக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதியை களமிறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பிரேமலதாவுக்கே மக்கள் மத்தியில் அனுதாபம் கிடைக்கும் என்பதால், அவரே அங்கு போட்டியிடுமாறு அதிமுக மூத்த நிர்வாகிகள் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற கண்டனத்தையடுத்து பொன்முடியை அமைச்சராக பதவியேற்க அழைப்பு விடுத்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மதியம் 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் நடைபெறவுள்ளது. இன்றைக்குள் பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில் பணிந்தார் ஆளுநர் ரவி.
2024 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வுக்கு பதிலாக மாற்றுத் தேர்வு முறை தேவை, உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும், குற்றவியல் வழக்கு சட்டங்களின் பெயர்கள் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும், ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
பிரபல இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்குவதற்கு இசைக் கலைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சென்னை மியூசிக் அகாதெமிக்கு எதிர்ப்பாளர்கள் எழுதியுள்ள கடிதத்தில், “மனு தர்மம், அயோத்தி, ஸ்ரீராமர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அவரது கருத்துகளால் நாங்கள் வேதனை அடைந்துள்ளோம். இசையுலகின் அடிப்படை நம்பிக்கைகளை வேண்டுமென்றே அவர் உடைக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டுள்ளார். அதில், 133 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகையாக ஏழை குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ₹3,000 வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த வேண்டும், வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
Sorry, no posts matched your criteria.