News July 20, 2024

காவிரியில் 78 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

image

கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு வினாடிக்கு 78 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News July 11, 2025

தலையில் அதிக எண்ணெய் வைத்தாலும் ஆபத்து..!

image

தினமும் தலைமுடியில் அதிக எண்ணெய் தேய்த்தால் அது முடியின்கால்களை அடைத்துவிடுமாம். இதனால் தலைமுடி நன்றாக வளர்வதில் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். அதைப்போன்று அதிக எண்ணெய் இருக்கும்போது தூசியும், அழுக்கும் தலையில் சேருவதால் அரிப்பு, பொடுகு அதிகரிக்குமாம். ஆகையால் சிறிதளவு தேங்காய் எண்ணெயை தலை முழுவதும் படும்படி நன்றாக மசாஜ் செய்து, எண்ணெய் பிசுக்கு போகும் படி கழுவினாலே போதுமானதாம்.

News July 11, 2025

நாங்கள் 11, திமுக பூஜ்ஜியம்: இபிஎஸ்

image

அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது, ஆனால் திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரியாவது கொண்டு வந்தீர்களா என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தான் அரசுப்பள்ளியில் படித்து வந்ததால், மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேரும் வகையில் 7.5% உள் இடஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

News July 11, 2025

மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்

image

*கோழையாக இருப்பதை விட போரில் கொல்வதும் கொல்லப்படுவதும் சிறந்தது. *நீங்கள் என்ன சிந்திக்கிறீர்களோ, சொல்கிறீர்களோ, செய்கிறீர்களோ அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. *ஒரு மனிதரின் குறிக்கோளில் எந்த கணத்தில் சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறதோ அந்த கணமே எல்லாமே கறைபட்டுவிடும். * அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படையாது,வன்மம் கொள்ளாது,பழிவாங்காது.

error: Content is protected !!