News March 26, 2024

மதத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்தும் பாஜக

image

பாஜக அரசு மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார். பாஜக குறித்து பேசிய அவர், “அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி பாஜக அரசு நாடு முழுவதும் வசூல் செய்கிறது. இரட்டை இலை சின்னத்தை முடக்க பாஜக அரசு முயற்சித்தது. ஆனால், அது முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை” என கூறியுள்ளார்.

News March 26, 2024

நாளை கடைசி: 1930 பணியிடங்கள்

image

ESI மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 27) கடைசி நாளாகும். B.Sc செவிலியர் படிப்புடன், ஓராண்டு பணி அனுபவம் உடைய, இந்திய செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வயது 18 – 30. இணையதளம்: <>www.upsconline.nic.in<<>>

News March 26, 2024

காமராஜரைப் போல ஸ்டாலின் புகழடைந்துள்ளார்

image

காமராஜரைப் போல முதல்வர் ஸ்டாலின் புகழடைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புகழாரம் சூட்டியுள்ளார். சிவகங்கையில் பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், “மதிய உணவுத் திட்டத்தைப் போல, காலை சிற்றுண்டித் திட்டமும் நாடு முழுவதும் பரவியுள்ளது. மதிய உணவுத் திட்டத்தால் காமராஜர் புகழடைந்தது போல், சிற்றுண்டித் திட்டத்தால் முதல்வர் ஸ்டாலின் புகழடைந்துள்ளார்” என புகழ்ந்து பேசியுள்ளார்.

News March 26, 2024

பாக்., தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் பலி

image

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இஸ்லாமாபாத்திலிருந்து தாசு நோக்கிச் சென்று கொண்டிருந்த சீன கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்தில் வந்த மர்மநபர் மோதி குண்டுகளை வெடிக்கச் செய்தார். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

அரைசதத்தை தவறவிட்ட ரச்சின்

image

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிவந்த CSK வீரர் ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். 20 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 46 ரன்கள் அடித்த அவர், ரஷித் கான் பந்தில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்துள்ளார். தற்போது CSK அணி 6 ஓவரில் 69/1 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் 18*, ரஹானே 2* ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

News March 26, 2024

செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது

image

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்க செல்லும்போது செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஜனநாயக கடமையை தவற விடாமல் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தி வருவதில் உறுதியாக உள்ளதாக கூறிய அவர், பணப்பட்டுவாடாவை தடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

News March 26, 2024

போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

image

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், போபண்ணா ஜோடி அபார வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற ஆடவருக்கான இரட்டையர் பிரிவு போட்டியில், மொனாக்கோ நாட்டின் ஹியூகோ நைஸ் – ஜான் ஜீலின்ஸ்கி ஜோடியும், போபண்ணா – மேத்யூ எப்டன் ஜோடியும் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 7-5, 7-6 என்ற நேர் செட் கணக்கில் போபண்ணா – மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்று, காலிறுத்திச் சுற்றுக்கு முன்னேறியது.

News March 26, 2024

திமுக கூட்டணிக்கு தவ்ஹீத் ஜமாஅத் முழு ஆதரவு

image

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் தலைவர் எஸ்.எம் பாக்கர் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்காக வீடு, வீடாக தவ்ஹீத் ஜமாஅத் கட்சியினர் வாக்கு சேகரிப்பார்கள் என்றும், திராவிட அரசியலை பற்றி தெரிந்து வைத்து கொண்டு ஜிகினா காட்டி மக்களை அண்ணாமலை ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News March 26, 2024

‘4 பாஜக எம்.எல்.ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை’

image

அதிமுக போட்ட பிச்சையால் பாஜகவில் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சரும், எம்.பியுமான சி.வி சண்முகம் விமர்சித்துள்ளார். விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரைக்கு ஒரு கடைவிடாமல் வசூலித்தார்கள். மீண்டும் மோடி வேண்டாம் நமக்கு. மீண்டும் மோடி வந்துவிட்டால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து” என்றார்.

News March 26, 2024

₹10 லட்சம் இல்லாததால் உயிரிழந்த நடிகர்

image

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சேஷு, இன்று மதியம் உயிரிழந்தார். ₹10 லட்சம் இருந்தால் அவரை காப்பாற்றி விடலாம் என்று சொல்லப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்யாமலேயே சேஷுவின் உயிர் பிரிந்திருக்கிறது. அவருக்கு பணம் கொடுத்து உதவுங்கள் என்று பலர் கோரிக்கை வைத்தபோதும் போதுமான பண உதவி கிடைக்கவில்லை என்று தெரிகிறது. RIP

error: Content is protected !!