News May 14, 2024

இன்று முதல் “என் கல்லூரி கனவு” திட்டம் தொடக்கம்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு “என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் இரண்டாம் கட்டமாக இன்று முதல் மே 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல், கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் முறை, விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து பல்வேறு துறை நிபுணர்கள் மூலம் தெளிவுபடுத்தப்படவுள்ளது.

News May 14, 2024

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவியின் இசைப் பயணம்

image

இசை மீது ஆர்வம் கொண்ட ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஜோடி, பல்வேறு அற்புதமான பாடல்களை பாடியுள்ளனர். குறிப்பாக, உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே, பிறை தேடும் இரவிலே, யாரோ இவன் யாரோ இவன், யார் இந்த சாலையோரம் பூக்கள் பூத்ததோ போன்ற பாடல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இருவரும் தங்களது விவகாரத்தை அறிவித்த நிலையில், மீண்டும் இணைந்து பாடுவார்களா என்பது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.

News May 14, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

ஓட்டுக்கு பணம் தராததால் மறியல்

image

ஆந்திராவில் ஓட்டுக்கு கட்சிகள் பணம் தரவில்லை என்று கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காக்கிநாடா, ராஜமகேந்திரவரம் ஆகிய பகுதிகளில் பணம் கொடுக்கவில்லை என்று கூறி மக்கள் வேட்பாளர்கள் அலுவலகங்களை முற்றுகையிட்டனர். ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வேட்பாளர் அலுவலகத்தில் திரண்ட மக்களை போலீசார் விரட்டியடித்தனர்.

News May 14, 2024

4ஆம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதம்

image

மேற்கு வங்கம் (8 தொகுதிகள்) – 76.56%
ஜம்மு காஷ்மீர் (1 தொகுதி) – 37.93%
ஆந்திரா (25 தொகுதிகள்) – 68.20%
பிஹார் (5 தொகுதிகள்) – 56.75%
ஜார்கண்ட் (4 தொகுதிகள்) – 64.59%
மகாராஷ்டிரா (11 தொகுதிகள்) – 57.58%
ஒடிஷா (4 தொகுதிகள்) – 64.81%
தெலங்கானா (17 தொகுதிகள்) – 62.28%
உத்தர பிரதேசம் (13 தொகுதிகள்) – 58.05%
மத்திய பிரதேசம் (8 தொகுதிகள்) – 71.72%

News May 14, 2024

10ஆம் வகுப்பிலே மலர்ந்த ஜி.வி.பிரகாஷ் காதல்

image

10ஆம் வகுப்பு படிக்கும் போது தான், ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் முதல்முறையாக சந்தித்தனர். பள்ளி மியூசிக் பேண்டில் இருந்த ஜி.வி., சைந்தவி மீதும் அவரது பாடல்களால் மீதம் காதல் கொண்டார். காதலை சொல்ல காத்திருந்த ஜி.வி.யிடம், சைந்தவியே ஒருநாள் தனது காதலை வெளிப்படுத்தினார். நீண்ட காதல் பயணத்திற்கு பிறகு, 2013இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2020இல் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

News May 14, 2024

பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல்

image

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக இன்று உ.பி வரும் பிரதமர் மோடி, காலை 10 மணி அளவில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இந்த தொகுதியில், ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில், காங்கிரஸ் சார்பாக ஆஜய் ராயும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக அதர் ஜமால் லரியும் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

News May 14, 2024

பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்ட குஜராத் அணி

image

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் ரேஸிலிருந்து குஜராத் அணி வெளியேறியது. 63ஆவது லீக் போட்டி, அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற இருந்தது. ஆனால், அங்கு கனமழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இன்றைய லீக் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், 2024 ஐபிஎல் சீசனின் பிளே ஆஃப் ரேஸிலிருந்து குஜராத் அணி வெளியேறியதால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

News May 14, 2024

இன்று +1 தேர்வு முடிவுகள்

image

தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் படித்த பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வினை சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் எழுதியிருக்கின்றனர். மாணவர்கள், www.tnresult.nic.in என்ற இணையத்தில் அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

image

ஐ.பி.எல் தொடரில் இன்று டெல்லி – லக்னோ அணிகள் மோதுகின்றன. டெல்லி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது. லக்னோ 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க அந்த அணி எஞ்சிய 2 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!