India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
6 வருடங்களுக்கு முன்பு விராட் கோலியுடன் செல்ஃபி எடுத்த ரசிகை, தற்போது 2024 WPL கோப்பையை அவருக்கு சமர்ப்பித்துள்ளார். நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில், டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இதில் RCB வீராங்கனை ஷ்ரேயங்கா பட்டில், 13 விக்கெட்டுகளை வீழ்த்தி Purple கேப்புக்கு சொந்தக்காரரானர். கோலியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 2006-11ல் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்து வரும் நிலையில், அதற்கு தடை விதிக்குமாறு முறையிடப்பட்டது. அதனை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது.
இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக பெயரை பயன்படுத்தக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் முறையிட்டிருக்கிறார். அதிமுகவின் இரு அணிகளையும் பொதுச் சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும் என்றும் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக பாஜக கூட்டணிக்கு 10% வாக்குகள் கிடைத்தாலே பெரிய விஷயம் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடும். அதேநேரம், மிகப்பெரிய வாக்கு வங்கி வைத்திருக்கும் அதிமுகவும் பாமகவும் இணைந்தால், வட தமிழகம் & கொங்கு மண்டலத்தில் கணிசமான வாக்குகளை பெறும்” எனக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. அவரது மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ பட வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் இந்தப் படத்தில், மொத்தம் 15-க்கும் மேற்பட்ட சண்டைக் காட்சிகள் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக்ஷன் – ஸ்போர்ட்ஸ் ட்ராமா கதைக்களத்தில் உருவாகும் இப்படத்துக்கு சாம் CS இசையமைக்கிறார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை இன்று முதல் காங்கிரஸ் கட்சி விநியோகிக்க உள்ளது. ரூ.500 கட்டணமாக செலுத்தி மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த மனுக்களை மார்ச் 20, மதியம் ஒரு மணிக்குள் கொடுக்க வேண்டும். பொதுத் தொகுதிக்கு ரூ.30 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.15,000, சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.5,000 கட்சி நன்கொடையாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ரோஹித் ஷர்மாவுடன் இதுவரை பேசவில்லை என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ” என் வாழ்நாளில் பெரும் பகுதி ரோஹித் தலைமையின் கீழ் விளையாடி உள்ளேன். அவரின் அனுபவம் மும்பை அணிக்கு மேலும் பலம் சேர்க்கும். அவரோடு இணைந்து பணியாற்ற எனக்கு எவ்வித சிரமமும் இல்லை. அவருடன் இணைந்து பணியாற்றி கோப்பையை வெல்வதே நோக்கம்” என்றார்.
தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவையில் இன்று சாலைப் பேரணியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. இதற்காக 5.30 மணியளவில் விமானம் மூலம் கோவை வரும் அவர், சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை பேரணியாக செல்கிறார். வழி நெடுகிலும் அவரை வரவேற்க பாஜக தொண்டர்கள் பூக்களுடன் காத்திருக்கின்றனர். மறுபுறம், எதிர்கட்சியினர் சமூக வலைதளங்களில் #GoBackModi என்று டிரெண்ட் செய்து வருகின்றனர்.
2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக RCB அணி வீரர் விராட் கோலி பெங்களூரு வந்தடைந்தார். சமீபத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்த அவர், ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேற்று இந்தியா திரும்பினார் கோலி. ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கோலி அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸூக்கு 9 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1) குமரி- விஜய் வசந்த், 2) விருதுநகர்- மாணிக்கம் தாகூர், 3) சிவகங்கை – கார்த்திக், 4) கரூர் – ஜோதிமணி, 5) திருவள்ளுர்- சசிகாந்த் & விஸ்வநாதன், 6) மயிலாடுதுறை- பிரவின் சக்ரவர்த்தி , 7) கிருஷ்ணகிரி – செல்லகுமார், 8) கடலூர்- அழகிரி, 9) நெல்லை- பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.