India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அவர், சம்பல்பூர் தொகுதியில் களம் காண்கிறார். கடைசியாக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து 2012ஆம் ஆண்டில் பீகாரில் இருந்தும், 2018ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மத்திய, மாநில அரசுகளின் மீது தமிழ்நாட்டு மக்கள் கடுங்கோபத்தில் உள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசிய அவர், “மக்களின் மனநிலை அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது. 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மக்களின் வளர்ச்சிக்காக திமுக மற்றும் பாஜக அரசுகள் பணியாற்றவில்லை” என்றார்.
சைவத் திருத்தலங்களில் மிக சிறப்பு வாய்ந்த தலமாக திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில் போற்றப்படுகிறது. ஞானசம்பந்தர் வழிபட்ட சிறப்புடைய இந்தத் தலத்தில் ஈசன் பதவி யோகம் அருள்பவராக அருள்பாலிக்கிறார். இந்தத் தலத்துக்கு வந்து இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, சூட்சுமநாதர் – மங்களாம்பிகைக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, வெண்பொங்கல் படைத்து வழிபட்டால் உயர் பதவிகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 8 வரை 4,107 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உள்பட 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்.12-22ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். மே 10ஆம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது.
மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். மாணவர்கள் இன்றிரவு 11.50 வரை விண்ணப்பிக்கலாம். மத்திய பல்கலைக்கழகங்கள், அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர CUET பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேர்வு மே 15 – 31வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு exams.nta.ac.in என்ற இணையதளத்தை காணலாம்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது. தொடர்ந்து, தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியுடன் இத்தேர்தலை எதிர்கொள்கிறது. இதையடுத்து, பல்வேறு அமைப்புகளும், சிறிய அரசியல் கட்சிகளும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், நேற்றிரவு கொங்கு மக்கள் முன்னணி கட்சி அதிமுகவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
✍அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். ✍செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை. ✍நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும். ✍மண்டியிட்டு வாழ்வதைவிட, நிமிர்ந்து நின்று சாவது மேலானது.✍எதிரிகளும், தோல்வியும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம். ✍எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நாட்டை ஏமாற்றுவது எளிதானது.✍சொல்லின் சிறந்த வடிவம் செயல்.
*மத்திய, மாநில அரசுகளின் மீது மக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர் – கிருஷ்ணசாமி
*சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு.
*லெபனான் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா சாம்பியன் பட்டம் வென்றார். *அமுல் பால் பொருட்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
*மக்களவைத் தேர்தலில் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடவுள்ளார்.
லெபனான் உலக டேபிள் டென்னிஸ் ஃபீடர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். பெய்ரூட்டில் நேற்று நடந்த மகளிர் பிரிவு இறுதிச் சுற்றில் ஸ்ரீஜா அகுலா, லக்ஸம்பர்க்கின் சாராவுடன் மோதினார். ஆட்டத்தின் முடிவில் ஸ்ரீஜா 6-11, 12-10, 11-5, 11-9 என்ற கேம் கணக்கில் சாராவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். இது ஸ்ரீஜா வெல்லும் 2ஆவது WTT பட்டமாகும்.
கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் ‘தக் ஃலைப்’ படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இந்தப் படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தை கமலை நேரில் சந்தித்து விளக்கிச் சொல்ல துல்கர் சல்மான் நினைத்து இருக்கிறார். இதற்காக கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்திற்கு வந்த அவரை, கமல் அன்போடு ஆரத்தழுவி வழியனுப்பியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.