India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளில் திமுக, அதிமுக, பாஜக நேரடியாக மோதுகின்றன. வட சென்னை, தென் சென்னை, வேலூர், தி.மலை, நாமக்கல், நீலகிரி, பொள்ளாச்சி, கோவை, பெரம்பலூர் தொகுதிகளில் 3 கட்சிகளின் சார்பாக வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். 2019இல் கோவை தவிர மற்ற 8 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களே வென்றனர். கோவையிலும் திமுக கூட்டணியில் இடம் பெற்ற சிபிஎம்-ஐ சேர்ந்த நடராஜன் வென்றார்.
ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் மே 26ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மே 24ஆம் தேதி குவாலிஃபையர் 2 போட்டியும் சென்னையிலேயே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடருக்கான இறுதிப் போட்டி சென்னையில் 3ஆவது முறையாக நடைபெறவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இறுதிப் போட்டியில் சிஎஸ்கே விளையாடினால் எப்படி இருக்கும்?
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 471 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மார்ச் 20இல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நேற்று (மார்ச் 25) ஒரே நாளில் 350 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாளையுடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிகிறது.
ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிடும் ஓபிஎஸ், பலா, திராட்சை சின்னத்தில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார். அவருக்கு எதிராக களமிறங்கியுள்ள மற்றொரு சுயேச்சை ஓ.பன்னீர்செல்வமும் மா, பலா, வாழை போன்றவற்றை சின்னமாக ஒதுக்கக் கோரியுள்ளார். இருவருக்கும் பழ வகைகளில் ஒன்றை சின்னமாக ஒதுக்கினால் குழப்பம் ஏற்படலாம். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு செல்ல வேண்டிய வாக்கு மாற வாய்ப்புள்ளது.
தனுஷைப் போல் ஜி.வி.பிரகாஷ் நடிப்பதாக இயக்குநர் லிங்குசாமி பாராட்டியுள்ளார். கள்வன் படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் பேசிய அவர், “ஜி.வி நடித்த கள்வன் பட டிரெய்லரைப் பார்க்கும் போது அவரது நடிப்பு நிறைய மாறி இருப்பதை பார்க்கிறேன். பொல்லாதவன் படத்திற்கு இசையமைத்த போது தனுஷ் நடிப்பதை மறைந்து நின்று பார்த்து கற்றுக் கொண்டார் என்று நினைக்கிறேன். இந்த படம் அவரை பெரிய அளவில் பேச வைக்கும்” என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் உ.பி அமேதி, கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதியில் தோல்வியடைந்த அவர், வயநாட்டில் வெற்றி பெற்றார். வரும் தேர்தலிலும் அவர் வயநாட்டில் போட்டியிடுகிறார். அங்கு அவரை எதிர்த்து களம் காணும் பாஜக வேட்பாளர் சுரேந்திரன், 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் கிடைத்த முடிவுதான் இம்முறை வயநாட்டில் ராகுலுக்கு கிடைக்கும் என சூளுரைத்தார்.
இந்திய மக்கள் பாஜகவை தூக்கி எறியும் நாள் விரைவில் வரும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். காஞ்சியில் பேசிய அவர், “டெல்லி JNU பல்கலை.யில் இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் ஏபிவிபி படுதோல்வி அடைந்துள்ளது. அதைப்போல தமிழ்நாட்டு மக்களும் பாஜகவை புறந்தள்ள வேண்டும். வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக இல்லாத இந்தியா அமையும், அதுவே நம்முடைய லட்சியம்” என்றார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவில் தங்களது சொத்து மதிப்பை தாக்கல் செய்ய வேண்டும். அந்தவகையில், பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை செளந்தரராஜன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், ₹6.54 கோடிக்கு அசையும் சொத்துகள், 200 பவுன் தங்க நகைகள், ₹15 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் என மொத்தம் ₹21.54 கோடி மதிப்பு சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எப்போதும் தமிழ், தமிழ்… என முழங்கி வரும் சீமான், விருதுநகரில் நாதக சார்பில் கெளசிக் போட்டியிடுவார் என அறிவித்தார். ஓமன் நாட்டில் படித்துவிட்டு, நேரடியாக தமிழக அரசியலில் குதித்த, நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழே படிக்கத் தெரியவில்லை. நேற்று வேட்புமனு தாக்கலின்போது, தமிழ் படிக்க தெரியாததால், தேர்தல் உறுதிமொழியை தேர்தல் அலுவலர் படிக்க, அதனை பின்பற்றி கெளசிக் படித்தார்.
தமிழ்நாட்டில் திமுக அதிமுகவுக்கு இடையேதான் போட்டி என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு பேசிய அவர், “எங்கள் எதிரில் அதிமுக என்ற இயக்கம் இருக்கிறது. அவர்களை தான் போட்டியாக கருதுகிறோம். அதிமுக என்ற பிரதான கட்சி என்ன சொல்கிறது என்பதற்கு மட்டுமே பதில் சொல்லுவோம். ப்பப்்்
Sorry, no posts matched your criteria.