India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் செய்துள்ளது. நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளுடன் 21 மீனவர்களை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழக மீனவர்கள் கைது தொடர் கதையாகி வருகிறது.
பிரதமர் மோடியின் உரையை AI தொழில்நுட்பத்தின் உதவியோடு தமிழில் மொழிபெயர்க்க துவக்கப்பட்ட டிவிட்டர் கணக்கை, டிவிட்டர் எக்ஸ் தளம் சஸ்பெண்ட் செய்துள்ளது. 2 நாட்களுக்கு முன் குமரியில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் இந்த டிவிட்டர் கணக்கை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியிருந்தார். இந்த நிலையில், அந்த கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் தொடங்கிய பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை நேற்று மும்பையில் நிறைவடைந்தது. தொடர்ந்து, இன்று மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
WPL இல் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் ஆர்வத்தில் விளையாட உள்ளன. ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு வருவது இதுவே முதல் முறை. டெல்லி அணிக்கு இது இரண்டாவது முறை. எந்த அணி கோப்பையை வெல்லும்.
திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தல் இல்லை; MLA-வாக பொன்முடி தொடர்கிறார் என்று தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வேண்டும் என முதல்வர், ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது தேர்தல் அதிகாரியும் MLA-வாக தொடர்வதாக கூறியதால், ஆளுநர் சென்னை திரும்பிய உடன், அவர் அமைச்சராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. இதனால் அமைச்சரவையில் இலாக்கா மாற்றப்படும்.
➤ தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் ரூ.1.42 கோடி ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் ➤ ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு முன்னால் குறைந்தபட்சம் ஒரே கட்டமாக ஒரே தேர்தல் என்பதை முயற்சிக்கலாமே என கமல்ஹாசன் கேள்வி ➤ வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் ➤ ஐ.பி.எல் : சென்னை-பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 18) தொடங்குகிறது.
ஐபிஎல் தொடரில் 17ஆவது சீசன் வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியும், பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 18) ஆன்லைன் (Paytm insider)மூலம் மட்டும் நடைபெற உள்ளது. குறைந்தபட்சம் ரூ1,700 முதல் அதிகபட்சம் ரூ.7,500 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முயற்சிப்பதற்கு முன்னால் குறைந்தபட்சம் ஒரே கட்டமாக ஒரே தேர்தல் என்பதை நாம் முயற்சிக்கலாமே என மநீம தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.19இல் தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின் முடிவுகளுக்கு, 45 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
வெள்ளரிக்காயில் ஃபைபர் சத்துக்கள் அதிகமாக உள்ளன. உடலில் பி1,பி2,பி3,பி4,பி5, பி6 ஆகிய சத்துக்களையும், நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். மலச்சிக்கலைத் தவிர்க்கவும், கெட்ட அழுக்குகளை வெளியேற்றவும் வெள்ளரிக்காய் உதவுகிறது. குறிப்பாகக் கோடைக் காலத்தில் உடலில் நீர்ச்சத்தைக் குறையவிடாமல் பார்த்துக் கொள்ளும். இரைப்பையில் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்த வல்லது. எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.
மார்ச் – 17 ▶பங்குனி – 04 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM, 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4.30 PM – 6:00 PM ▶குளிகை: 03:00 PM – 04:30 PM ▶எமகண்டம்: 12:00 PM – 01:00 PM ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
Sorry, no posts matched your criteria.