News March 17, 2024

APPLY NOW: 2049 காலிப் பணியிடங்கள்

image

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப அதிகாரி, மூத்த அறிவியல் உதவியாளர், மூத்த ஆராய்ச்சி உதவியாளர், உதவி தொழில்நுட்ப அதிகாரி, நர்சிங் அதிகாரி உள்ளிட்ட 2,049 பணியிடங்களுக்கு ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது. தகுதியுடையவர்கள் <>ssc.nic.in<<>> என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். நாளை கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்கவும்.

News March 17, 2024

இறுதிக்கட்டத்தில் ‘கங்குவா’

image

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எடிட்டிங் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் கோடையில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ள நிலையில், படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்றும், அதில் படத்தின் வெளியீட்டு தேதி இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

News March 17, 2024

நெக்லெஸ் நெபுலாவில் நிகழ்ந்த மாற்றம்

image

வான்வெளியில் ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள் ஏராளம். அந்த வகையில், பூமியிலிருந்து 15,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நெக்லெஸ் நெபுலா கிரகத்தில் தோன்றிய அசாதாரண நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். ஒரு சிறிய, பிரகாசமான பச்சை வாயு மண்டலம், ஒளிரும் அண்டப் பொருட்களின் வளையத்தால் சூழப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட விஞ்ஞானிகள், ஹப்புள் ஸ்பேஸ் தொலைநோக்கி மூலம் இதனை படம்பிடித்ததாக தெரிவித்தனர்.

News March 17, 2024

பொன்முடியை அமைச்சராக்க மறுத்தார் ஆளுநர்

image

பொன்முடியை அமைச்சராக்க வேண்டி முதல்வர் ஸ்டாலின் அளித்த கடிதத்தை நிராகரித்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாது என்று பதில் கடிதம் எழுதியிருக்கும் ஆளுநர், “பொன்முடியின் தீர்ப்பு நிறுத்திதான் வைக்கப்பட்டிருக்கிறதே தவிர குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்படவில்லை” என்று பதிலளித்திருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

News March 17, 2024

ஐபிஎல்லில் அதிவேக சதம் அடித்தவர்கள்

image

▶கிறிஸ் கெயில்- புனேவுக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில், 2013 ▶யூசுப் பதான்- மும்பைக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில், 2010 ▶டேவிட் மில்லர்- பெங்களூருக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில், 2013 ▶ஆடம் கில்கிறிஸ்ட்- மும்பைக்கு எதிரான போட்டியில் 42 பந்துகளில், 2008 ▶ஏபி டிவில்லியர்ஸ்- குஜராத்துக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில், 2016 ▶டேவிட் வார்னர்- பெங்களூருக்கு எதிரான 43 பந்துகளில், 2017

News March 17, 2024

தேர்தல் ஆணையம் மீதுதான் சந்தேகம்

image

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மீதே சந்தேகம் உள்ளதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தேதியை நேற்று அறிவித்த தேர்தல் ஆணையம், பொய் செய்தி அதிகம் பரவுவதாக கவலை தெரிவித்தது. இதனை மேற்கோள்காட்டிய அவர், ஆணையம் மீதுதான் முதல் சந்தேகம் எழுகிறது என்றார். மேலும், எதிரிகள் எந்த ஆயுதம் எடுக்கிறார்களோ அதைவிட சிறப்பான ஆயுதத்தை எடுத்து வெற்றி பெறுவோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்

News March 17, 2024

சிக்கன் 65, கிரில் சிக்கன் சாப்பிடுவோர் கவனத்திற்கு

image

கிரில் சிக்கன், கோபி மஞ்சூரியன், சிக்கன் 65 போன்ற உணவுகளில் ‘ரோடமைன் B’ என்ற நிறமி கலப்பதால், 60 நாட்கள் வரை அந்த நிறமி நம் உடலைவிட்டு போகாது. அது நம் கல்லீரல், கிட்னி, மூளை, குடல் உள்ளிட்ட பகுதிகளில் தங்கிவிடும். ‘ரோடமைன் B’ நிறமி முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று. அது குடலில் காயத்தை உண்டாக்கி நாளடைவில் புற்றுநோயை வரவைத்துவிடும். இதனால் குழந்தைகள் வலுவிழந்து காணப்படுவார்கள். Source – Vikatan

News March 17, 2024

பாஜகவால் நாட்டுக்கு அச்சுறுத்தல்

image

பாஜகவை தோற்கடிப்பதே I.N.D.I.A. கூட்டணியின் ஒரே இலக்கு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற I.N.D.I.A. கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், பாஜகவால் மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதிலிருந்து நாட்டைக் காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மக்களை பிரித்தாலும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவோம் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.

News March 17, 2024

படங்களுக்கு தமிழ் பெயர் வையுங்கள்

image

முடிந்தவரை படங்களுக்கு தமிழ் பெயர்களை வையுங்கள் என திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி வலியுறுத்தியுள்ளார். இயக்குநர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த பின் பேசிய அவர், “படங்களுக்கு தமிழ் மொழியை தாண்டி வேறு மொழியில் பெயர் வைப்பதில் எனக்குமே உடன்பாடு இல்லை. OTT தளங்களில் மிகப்பெரிய அளவில் வியாபாரம் நடைபெறுவதால், படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வணிக நோக்கமே முழு காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

தேர்தல் பத்திரம் மூலம் நிதி வாங்கவில்லை

image

தேர்தல் பத்திரங்கள் மூலமாக எந்த நிறுவனத்திடம் இருந்தும் நிதியுதவி பெறவில்லை என தேமுதிக தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்பிஐ வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்க கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தேர்தல் பத்திரங்கள் எதையும் வாங்கவில்லை எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!