India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், நடத்தை விதிகள் நேற்று முதலே அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதி மீறல் புகாரில் தமிழகத்தில் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது. சிவகங்கையில் தேர்தல் விதிமுறையை மீறி, ஊர்வலம் சென்று சிலைகளுக்கு மாலை அணிவித்தது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தல் பத்திர மோசடி தொடர்பாக பாஜக கையும் களவுமாக பிடிபட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அழுத்தம் கொடுத்து பாஜக தேர்தல் பத்திர நிதி பெற்றதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறிய அவர், கட்சிக்கு பெற்ற நிதியை திமுக எப்போதும் தணிக்கைக்கு உட்படுத்தும் எனவும் தெரிவித்தார். மேலும், பாஜக அரசு நிறுவனங்களை பயமுறுத்தி அமலாக்கத்துறை மூலம் பல நூறு கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
கணுக்கால் காயம் காரணமாக 2023 உலகக் கோப்பையில் இருந்து விலகியது குறித்து ஹர்திக் பாண்டியா முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். “நான் 5 நாட்களுக்குப் பிறகு வருவேன் என்று நிர்வாகத்திடம் சொன்னேன். ஆனால், கணுக்காலில் 3 இடங்களில் ரத்தம் எடுக்கப்பட்டதால், என்னால் நடக்க முடியாமல் போனது. 10 நாட்களுக்கு வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டேன். முழுமையாக குணமடைய 3 மாதங்கள் ஆனது” எனக் கூறியுள்ளார்.
இபிஎஸ் முன்னிலையில் தமிழ்த்தேசிய ஆதரவாளர் என்று தன்னை காட்டிக் கொண்டு நாம் தமிழருக்கு ஆதரவாக செயல்பட்ட நாச்சியாள் சுகந்தி அதிமுகவில் தன்னை இணைந்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமமுகவில் இருந்து விலகிய பலரும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். நாச்சியாள் சுகந்தி-க்கு மகளிர் அணியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்றும் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.
வெயில் காலத்தில் கூலிங் கிளாஸ் அணிவது கண்களுக்கு நல்லதாகும். தரம் குறைந்த கிளாஸ்களை அணிவது கண்களுக்கு எதிர்வினையை ஏற்படுத்தும். இதனால் தரமான கூலிங் கிளாஸ்களை தேர்வு செய்து அணிவது அவசியம். அதை கீழ்காணும் வழியில் தேர்வு செய்யலாம் *புற ஊதா கதிர்களை தடுப்பது *வண்ணப்பூச்சு குறைந்தது *கண்களை முழுதும் மறைக்கும் வகையில் பெரியது *போலாரைஸ்டு லென்சுகளை கொண்டது
புஷ்பா படத்தின் “ஊ சொல்றியா மாமா” பாடல் படப்பிடிப்பில் அசெளகரியத்தை உணர்ந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “பேமிலி மேன் 2 சீரிஸில் நடித்தபோது இருந்த அசெளகரியத்தை, ‘ஊ சொல்றியா’ பாடல் படப்பிடிப்பிலும் உணர்ந்தேன். நடிகராக என்ன செய்யலாம் என்பதை ஆராயவே, அதில் நடிக்க முடிவெடுத்தேன். எப்போதும் எனது பாலினம் மீது அசெளகரியத்தையே உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு திருப்பதியில் தங்குவதற்கும், தரிசனம் செய்வதற்கும் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோட்டோக்கால் விதிகளின் படியே உயரதிகாரிகளுக்கு தாங்கும் வசதி அளிக்கப்படும். தேர்தல் முடியும் வரை இந்த விதியில் மாற்றமில்லை. எனவே திருப்பதி வரும் பக்தர்கள், விஐபிக்கள் விதிகளை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி நேற்று வெளியான நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. மதுரை மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பியாக உள்ள சு.வெங்கடேசனுக்கு இந்த முறையும் மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று அவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவும், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதனையொட்டி, இந்த இரண்டு நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதன்படி, அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மற்றும் பார்கள் இயங்கக்கூடாது. அத்துமீறி, கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலோ, டாஸ்மாக் கடைகளை திறந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடாளுமன்றத் தேர்தலில் சரியான வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நடிகர் ஜெயம் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள
சமூகவலைதள பதிவில், “வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்கும்படி அனைத்து இளம் வாக்காளர்களையும் கேட்டு கொள்கிறேன். தேர்தலில் சரியான வேட்பாளர்களுக்கு வாக்களித்து, அடிப்படை ஜனநாயக உரிமைகளை பயன்படுத்துங்கள்” எனக் கேட்டு கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.