India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (மார்ச் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ➤ தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் ➤ மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4இல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்➤ நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ➤ 2047ஆம் ஆண்டு தேர்தலுக்கு திட்டமிட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
1951-52ஆம் ஆண்டு இந்தியாவில் முதல்முறையாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சுமார் 4 மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது. இதற்கு அடுத்ததாக, 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 44 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தியாவில் 1980ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 4 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. இது குறுகிய காலத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு ஆகும்.
மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வசிக்கும் மக்களும், வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் புலம்பெயர்ந்தோருக்கு உள்ள திட்டத்தை போல மணிப்பூரிலும் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்ட அவர், வாக்குச் சீட்டின் மூலம் முடிவு அறிவோம். அமைதியாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மகளிர் பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் டெல்லி-பெங்களூரு அணிகள் நாளை மோதுகின்றன. WPL 2ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய டெல்லி அணி குஜராத்தை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 2ஆவது அரையிறுதியில் மும்பையை வீழ்த்தி பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு சென்றது. இரு அணிகளும் மோதும் இறுதிப் போட்டி டெல்லி மைதானத்தில் நாளை இரவு 7.30-க்கு தொடங்குகிறது.
பெங்களூருவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், IT ஊழியர்கள் Work From Home வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் அல்லாடி வரும் சூழலில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இயற்கை உபாதையை கழிக்க அருகிலுள்ள மால்களை தேடிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நிலைமை சரியாகும் வரை வீட்டிலிருந்து பணிபுரிய ஐடி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த 6 வழிமுறைகளை கடைபிடியுங்கள், வாழ்நாளில் வாய் துர்நாற்றம் நெருங்கவே நெருங்காது. 1) தினமும் காலை, இரவு என 2 முறை கட்டாயம் பல் துலக்குங்கள் 2) ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் பல் துலக்குங்கள் 3) நாக்கை தினமும் சுத்தப்படுத்துங்கள் 4) சரியான உணவு முறையை கடைபிடியுங்கள் 5) குறிப்பிட்ட நாள் இடைவெளியில் பிரஷ்ஷை மாற்றுங்கள் 6) பல் மருத்துவரிடம் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்யுங்கள்.
காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ளனர். காசாவுக்குள் புகுந்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 31,533 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 73,546 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காசாவின் நசீரத் நகரில் இஸ்ரேல் விமானப்படை திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் பாலஸ்தீனியர்கள் 36 பேர் பலியானதுடன், பலர் காயமடைந்தனர்.
நவகிரகங்களில் சக்தி வாய்ந்தவரான சனி பகவானின் உக்கிர பார்வை தற்போது கடகம், விருச்சிகம், மகரம், கும்ப ராசியினர் மீது விழுகிறது. இதனால் பல்வேறு சிக்கல்களை இந்த 4 ராசியினரும் எதிர்கொள்ள உள்ளனர். குறிப்பாக, ஆரோக்கியத்தில் குறைபாடு, தொழில், வியாபாரத்தில் மந்த நிலை, திட்டமிட்ட காரியங்கள் தள்ளிப் போவது, வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை போன்ற பல இன்னல்களை மேற்கண்ட ராசியினர் சந்திக்க உள்ளனர்.
இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கெளரவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அஷ்வின், 500ஆவது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதேபோல் டெஸ்டில் 100வது போட்டியையும் அவர் நிறைவு செய்தார். இதையடுத்து அவருக்கு ரூ.1 கோடி பரிசு அளித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கெளரவித்தது.
Sorry, no posts matched your criteria.