India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மின் நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் ஏப்ரல் மாதத்தில் தினசரி மின் நுகர்வு 45 கோடி யூனிட்கள் வரை உயர்ந்தது. தற்போது மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் தினசரி மின் தேவை 36 கோடி யூனிட்களாக குறைந்துள்ளது. இதனால், இனி மின்வெட்டு இருக்காது என்று நம்பப்படுகிறது.
உதவி அறுவை சிகிச்சை நிபுணருக்கான (Assistant Surgeon) 2,553 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, நாளையே கடைசி நாள் ஆகும். UGC அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றி விண்ணப்பதாரர்கள், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கவும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ₹56,100- ₹1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் ஆஜராகிறார். நாடாளுமன்றத் தேர்தலின்போது, தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை இபிஎஸ் தெரிவித்தார். இதனையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் இன்று ஆஜராகிறார்.
2016ஆம் ஆண்டு இதே நாளில், ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை 229(96) விராட் கோலியும், டிவில்லியர்ஸும் பதிவு செய்தனர். குஜராத் லயன்ஸுக்கு எதிரான இந்தப் போட்டியில், தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கோலி-டிவில்லியர்ஸ் கூட்டணி, 15 Four, 20 Six என விளாசி எதிரணியை திணறடித்தனர். கோலி 109(55), டிவில்லியர்ஸ் 129*(52) ரன்கள் குவித்து அசத்தினர்.
நாட்டில் சில்லரை பணவீக்கம் சற்றே குறைந்து 4.83 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது, கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவு குறைவு ஆகும். வெகுஜன மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய சில்லரை பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கி போராடி வருகிறது. ஆனால், கொரோனாவுக்கு பின் உயர்ந்த பணவீக்கம், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, திறந்தவெளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், தொழிலாளர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மே மாத இறுதிவரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். தொழிலாளர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாதவரத்தில் சிறுதானிய வியாபாரம் செய்துவந்த ஜெகநாதனுக்கு (40) லோகேஷ்வரி (35) என்ற மனைவியும், காவியா (13) என்ற மகளும் இருந்தனர். கடன் அதிகமானதால் ஜெகநாதன் தனது மகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கிறார். பின்னர், அவரும் லோகேஷ்வரியும் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கம்ப்யூட்டர் புரோகிராமிங்கில் கொண்ட ஆர்வத்தால், தனது நண்பர்களுடன் இணைந்து 2004இல் ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தொடங்கினார். அந்நிறுவனத்தின் அசுர வளர்ச்சியால் அவர், உலகின் டாப் 10 பணக்காரர்களுள் ஒருவரானார். இவரது வாழ்க்கையை மையமாக கொண்ட ‘தி சோஷியல் நெட்வொர்க்’ திரைப்படம், 2010இல் வெளியாகி பல அகாடமி விருதுகளை வென்றது.
மும்பையில் ராட்சத பலகை விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. அங்கு நேற்று வீசிய புழுதிப் புயலில் 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் சுமார் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நேற்று இரவு 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 14 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆஃப் சுற்றுகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. ரூபே (RuPay) கார்டு வைத்திருப்பவர்கள், தகுதிச் சுற்று 1, எலிமினேட்டர், தகுதிச் சுற்று 2 ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை இன்றே பெற்றுக் கொள்ளலாம் என்றும், மற்றவர்கள் நாளை (மே 15) வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் ஆப், பேடிஎம் இன்சைடர் மற்றும் www.insider.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.