News May 14, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை 4 நாள்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 குறைந்து ₹53,520க்கும், கிராமுக்கு ₹35 குறைந்து ₹6,690க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ₹90.70க்கும், கிலோ வெள்ளி ₹90,700க்கும் விற்பனையாகிறது.

News May 14, 2024

OTT-இல் வெளியானது ‘கள்வன்’

image

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள ‘கள்வன்’ திரைப்படம் இன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. பி.வி.ஷங்கர் இயக்கிய இப்படத்தில், பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காடுகளின் பின்னணியில் மனதை ஈர்க்கும் சம்பவங்களுடன் உருவான இப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

News May 14, 2024

7,39,539 மாணவ, மாணவிகள் தேர்ச்சி

image

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. 8,11,172 மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7534 மேல்நிலைப் பள்ளிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் 1964 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. குறிப்பாக, 241 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. 187 சிறைவாசிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் 170 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

11th Result: டாப் 10 மாவட்டங்கள்

image

▶கோயம்புத்தூர் – 96.02%
▶ஈரோடு – 95.56%
▶திருப்பூர் – 95.23%
▶விருதுநகர் – 95.06%
▶அரியலூர் – 94.96%
▶பெரம்பலூர் – 94.82%
▶சிவகங்கை – 94.57%
▶திருச்சி – 94.00%
▶கன்னியாகுமரி – 93.96%
▶தூத்துக்குடி – 93.86%

News May 14, 2024

கடைசி இடம் பெற்ற 10 மாவட்டங்கள்

image

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில், வேலூர் மாவட்டம் 84.40% தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே கடைசி இடத்தில் உள்ளது. திருவள்ளூர் – 85.54%, கள்ளக்குறிச்சி – 86.00%,
மயிலாடுதுறை- 86.39%, திருப்பத்தூர் – 86.88%, காஞ்சிபுரம் – 86.98%, திருவாரூர் – 87.15%, கிருஷ்ணகிரி – 87.82%, ராணிப்பேட்டை – 87.86%, புதுக்கோட்டை – 88.02%

News May 14, 2024

அரசுப் பள்ளி மாணவர்கள் 85.75% தேர்ச்சி

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 85.75%, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 92.36%, தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்கள் 98.09% தேர்ச்சி பெற்றுள்ளனர். இருபாலர் பள்ளிகளில் 91.61%, பெண்கள் பள்ளிகளில் 94.46%, ஆண்கள் பள்ளிகளில் 81.37% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 14, 2024

11th Result: பாடங்கள் வாரியான தேர்ச்சி விகிதம்

image

*அறிவியல் பாடப் பிரிவுகள்- 94.31%
*வணிகப்பிரிவு பாடப்பிரிவுகள் – 86.93%
*கலைப் பிரிவுகள் -72.89%
*தொழிற்பாடப் பிரிவுகள் – 78.72%
▶இயற்பியல் – 97.23% ▶வேதியியல் – 96.20% ▶உயிரியல் – 98.25% ▶கணிதம் – 97.21% ▶தாவரவியல் – 91.88% ▶விலங்கியல் – 96.40% ▶கணினி அறிவியல் – 99.39% ▶வணிகவியல் – 92.45% ▶கணக்குப் பதிவியல் – 95.22%

News May 14, 2024

+1 ரிசல்ட்: ஆண்கள் vs பெண்கள் யார் டாப்?

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,84,351 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 3,35,396 (87.26%) பேரும், 4,26,821 மாணவிகள் தேர்வெழுதிய நிலையில் 4,04,143 (94.69%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ஆம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் (7.43%) அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 8221 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 7,504 (91.27%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 14, 2024

+1 தேர்வில் 100/100 எடுத்த மாணவர்கள்

image

பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியானது. அதில், கணினி அறிவியல் தேர்வில் 3432 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இயற்பியல் – 696, வேதியல் – 493, வணிகவியல் – 620, பொருளியல் – 741, கணக்குப் பதிவியல் – 415, கணிதம் – 779, தமிழ் – 8, ஆங்கிலம் – 13 ஆகியோர் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 எடுத்தோரின் எண்ணிக்கை 8418.

News May 14, 2024

BREAKING: +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

image

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் http://tnresults.nic.in, http://dge.tn.gov.in என்ற இணையதளங்களின் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். மாணவர்கள் பதிவு செய்த செல்ஃபோன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!