News March 17, 2024

ஏ.ஐ.,மனிதர்களின் வேலையை பறித்து விடக்கூடாது

image

ஏ.ஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையை பறித்து விடக்கூடாது, மாறாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமென இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். பிருத்விராஜ், அமலாபால் நடித்துள்ள ஆடுஜீவிதம் படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘நேரம் தேவைப்படும் விஷயங்களின் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்’ என்றார்.

News March 17, 2024

17 மாலுமிகளை பத்திரமாக மீட்டது இந்திய கடற்படை!

image

அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் வர்த்தக கப்பல் கடத்தல் முயற்சியை இந்தியக் கடற்படை போர்க்கப்பல் முறியடித்துள்ளது. சோமாலியா கடற்பகுதியில் சென்ற எக்ஸ் எம்.வி ரூவென் என்ற வர்த்தக கப்பலில் பிடித்த கொள்ளையர்கள் 17 மாலுமிகளை சிறைபிடித்தனர். தகவலறிந்து விரைந்த இந்தியாவின் ஐ.என்.எஸ் கோல்கட்டா போர்க்கப்பல், வர்த்தக கப்பலைச் சுற்றிவளைத்து எச்சரிக்கை விடுக்கவே, 35 கடற்கொள்ளையர்களும் சரணடைந்துள்ளனர்.

News March 17, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News March 17, 2024

நவ கைலாசங்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்

image

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதிக்கரையோரங்களில், சிவபெருமானின் நவ கைலாச தலங்கள் உள்ளன. முதல்தலம், பாபநாசத்தில் பிரமாண்டமாக உள்ளது. 2 முதல் 9 வரையிலான தலங்கள், சேரன்மாதேவியில் தொடங்கி, சேர்ந்தபூமங்கலம் வரை அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால், சூரியன், சந்திரன், செவ்வாய், குரு உள்ளிட்ட 9 கிரகங்களின் அருளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

News March 17, 2024

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவோம்

image

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இந்தியாவில் தொடங்கிவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில் , ‘பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முழு நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் மக்களவைத் தேர்தலில் பங்கேற்க உள்ளது. மக்களுக்கு பணியாற்றவும், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக வலுப்படுத்தக் கிடைத்த இது ஒரு நல்ல வாய்ப்பாகும்’ என்றார்.

News March 17, 2024

இலங்கை அணிக்கு பாகிஸ்தான் பயிற்சியாளர்

image

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளார். குறுகிய கால அடிப்படையில், டி20 உலக கோப்பை வரை மட்டும் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆகிப் ஜாவேத், 1992ல் ஒருநாள் உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் முன்பு இருந்துள்ளார்.

News March 17, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News March 17, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ➤ தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் ➤ மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4இல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்➤ நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ➤ 2047ஆம் ஆண்டு தேர்தலுக்கு திட்டமிட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

நீண்ட நாட்கள் நடைபெற்ற வாக்குப்பதிவு அறிவோமா ?

image

1951-52ஆம் ஆண்டு இந்தியாவில் முதல்முறையாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சுமார் 4 மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது. இதற்கு அடுத்ததாக, 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 44 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தியாவில் 1980ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 4 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. இது குறுகிய காலத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு ஆகும்.

News March 17, 2024

மணிப்பூர் முகாமில் உள்ளவர்களுக்கு சிறப்பு வசதி

image

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வசிக்கும் மக்களும், வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் புலம்பெயர்ந்தோருக்கு உள்ள திட்டத்தை போல மணிப்பூரிலும் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்ட அவர், வாக்குச் சீட்டின் மூலம் முடிவு அறிவோம். அமைதியாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!