India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1982இல் குண்டர் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, 5 குற்றங்களில் ஈடுபடுவோர் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தனர். பிறகு 1988ல் வனக் குற்றவாளிகள், 2004இல் திருட்டு வீடியோ தயாரிப்பவர்கள், 2006இல் மணல் கடத்தல்காரர்கள், 2014இல் பாலியல் குற்றவாளிகள் சேர்க்கப்பட்டனர். 2014 சட்டத்திருத்தம் மூலம், “தொடர்” என்ற வார்த்தை நீக்கப்பட்டு, முதலில் குற்றம் செய்வோரையும் கைது செய்ய வகை செய்யப்பட்டது.
மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உத்தரவிட்டால்தான், குண்டர் சட்டத்தில் ஒருவரை கைது செய்யலாம். அதுவும் முதலில் 3 மாதத்துக்கு மட்டுமே கைது செய்யலாம். பிறகு 12 மாதம் வரை நீட்டிக்கலாம். குண்டர் சட்ட நடவடிக்கைக்கு, மாநில அரசின் 3 பேர் குழு ஒப்புதல் தேவை. இல்லையெனில் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும். கைதுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தும் நிவாரணம் பெறலாம்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதசார்பற்ற ஜனதா தள MLA-வுமான ரேவண்ணா ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் கடத்தப்பட்ட புகாரில், மே 4ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றம், ரேவண்ணாவுக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பட்லர் அதிரடியாக ஆடி எதிரணிக்கு பெரும் சவாலாக திகழ்கிறார். இந்நிலையில், சொந்த நாட்டுக்காக விளையாட உள்ளதால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் இருந்து அவர் விலகியுள்ளார். RR அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ள நிலையில், ஒரு வெற்றிபெற்றால் ப்ளே ஆஃப்க்கு முன்னேறிவிடும். இருப்பினும் பட்லர் தற்போது விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
‘ஜெயிலர்’ படத்தையடுத்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, மும்பை ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினி அவருக்கு சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி, தி.மலை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும். இதனால், சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், அகமதாபாத்தில் தற்போது மழை பெய்துவருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றபின் ஆட்டம் தொடங்கும் எனத் தெரிகிறது. மழை தொடர்ந்தால் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. ப்ளே ஆஃப்க்கு செல்ல GT அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1 லட்சம் தர உள்ளதாகவும், INDIA கூட்டணி வெற்றிபெற்றதும் ஜூலை 1 முதல் இந்த பணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அட்டவணையை பதிவிறக்கம் செய்யலாம். மேலும், மாணவர்கள் தங்களது முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிகளில் தேவையான முன்னேற்பாடு செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திஹார் சிறையில் தன்னை அவமானப்படுத்த முயற்சிகள் நடந்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். சிறையில் 2 கேமராக்கள் வைத்து தன்னை கண்காணித்ததாகவும், அந்த வீடியோவை சிறைத்துறையினர் பிரதமர் மோடிக்கு அனுப்பியதாகவும் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். பாஜக இவ்வளவு செய்தும் கட்சியினர் ஒற்றுமையாக இந்ததற்காக பாராட்டிய அவர் INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், சிறையில் இருந்து வெளியே வருவேன் என்றார்.
Sorry, no posts matched your criteria.