News May 13, 2024

12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

image

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி, தி.மலை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும். இதனால், சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Similar News

News December 15, 2025

இனி தனியாரும் அணுமின் நிலையங்களை நடத்தலாம்!

image

அணுமின் உற்பத்தி துறையை தனியாருக்கு திறந்துவிடும் SHANTI மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம், சிறிய அளவிலான அணுமின் நிலையங்களை நிறுவ தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல், அரசின் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்தும் தனியார் நிறுவனங்கள் செயல்படலாம். நாட்டில் அமைக்கப்பட உள்ள தரவு மையங்களுக்கு அதிகளவு மின்சாரம் தேவை என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

News December 15, 2025

BREAKING: திமுகவில் கூண்டோடு ராஜினாமா

image

கோவை, விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அங்குள்ள 9-வது வட்டச் செயலாளர் மயில்சாமி தலைமையில் 75-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தனிப்பட்ட காரணங்களுக்காக திமுகவில் இருந்து விலகியது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொங்கு பகுதியில் திமுகவை பலப்படுத்தும் முயற்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

News December 15, 2025

IND vs SA: அக்சர் படேல் அணியில் இருந்து விடுவிப்பு

image

உடல்நிலை சரியில்லாத காரணத்தால், SA-க்கு எதிரான டி20 தொடரில் இருந்து அக்சர் படேல் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஷெபாஷ் அகமது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இந்தியா 2 போட்டிகளிலும், SA ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சியிருக்கும் 2 போட்டிகள் வரும் 17 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

error: Content is protected !!