India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரிவர்த்தனைக்காக வரும் சொத்து பத்திரங்களின் சரிபார்ப்பு நிலவரத்தை, அதை வாங்குவோர் தெரிந்துகொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பத்திரங்களில் பிழை இருப்பதாகக் கூறி மக்களை அலைக்கழிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த உத்தரவை சார்-பதிவாளர்கள் கடைப்பிடிப்பதை மாவட்ட பதிவாளர்கள், டிஐஜிக்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த பூனம் என்ற மாணவி 10ஆம் வகுப்பு தேர்வில் 99.72% மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை பிரகாஷ் குஷ்வாஹா 25 ஆண்டுகளாக பானிபூரி கடை நடத்திவரும் நிலையில், பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் பூனம் தன் தந்தைக்கு உதவி செய்துள்ளார். ஏழ்மையிலும் சாதிக்க துடித்த அவர், தற்போது 99.72% மதிப்பெண் பெற்று பெற்றோரை பெருமையடையச் செய்துள்ளார். டாக்டராவதே தனது லட்சியம் என்கிறார் பூனம்.
மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ஹரா பட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பாக்யராஜ் பேசிய போது, மோகன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருப்பவர், சினிமா சம்பிரதாய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவித்தார். பாடல்களே மோகனின் பலம், பாடல் காட்சியில் மோகனே பாடுவது போல இருக்கும், இந்த குணத்தை சிவாஜியிடம் மட்டுமே பார்த்துள்ளதாகவும் பாக்யராஜ் கூறினார்.
மறைந்த MP செல்வராஜ் உடலுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதியில் போட்டியிட்டு MP-யான செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.
ஆந்திர சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தால், 2ஆவது முறையாக ஜெகன் மோகன் அரசு ஆட்சியமைக்கும். இல்லையேல் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும். கடந்தத் தேர்தலில் ஜெகன் மீதான பரிதாப அலை அவரின் அரசு அமைய காரணமாக இருந்தது. ஆனால் இந்த முறை, அவரது அரசு 5 விவகாரங்களில் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது.
ஆந்திர சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தால், 2ஆவது முறையாக ஜெகன் மோகன் அரசு ஆட்சியமைக்கும். இல்லையேல் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும். கடந்தத் தேர்தலில் ஜெகன் மீதான பரிதாப அலை அவரின் அரசு அமைய காரணமாக இருந்தது. ஆனால் இந்த முறை, அவரது அரசு 5 விவகாரங்களில் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், சட்டத்திற்கு உட்பட்டு கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. முன்னதாக நிகழ்ச்சி நடத்த விழுப்புரம் போலீசார் அனுமதி மறுத்ததாக வழக்குத் தொடரப்பட்டது.
கிருஷ்ணகிரியின் போச்சம்பள்ளி தாலுகாவில் பால் கொள்முதலை அமுல் அதிகரித்ததாக வெளியான தகவலுக்கு ஆவின் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பால் கொள்முதலை அமுல் நிறுவனம் அதிகரிக்கவில்லை எனக் கூறிய ஆவின் நிர்வாகம், கிருஷ்ணகிரியில் பால் பொருட்களை உற்பத்தி செய்ய எந்த மையத்தையும் அமுல் நிறுவனம் அமைக்கவில்லை என விளக்கமளித்தது. கிருஷ்ணகிரியில் அமுல் நிறுவனம் 9,000லி பால் கொள்முதல் செய்துவருகிறது
தொழிலதிபர் அதானி பலனடையவே அக்னிவீர் திட்டத்தை மோடி கொண்டு வந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், அக்னிவீர் திட்டத்தை நாட்டில் பிரதமர் மோடியும், அவரது அலுவலகமும் கட்டாயப்படுத்தி திணித்து இருப்பதாக விமர்சித்தார். ராணுவத்தினருக்கான பென்சன், கேண்டின் கான்டிராக்ட் போன்ற பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அதானிக்கு செல்ல மோடி விரும்புவதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரியில் மழை பெய்யக் கூடும். இதனால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.