News May 13, 2024

பத்திர பதிவுத்துறை தலைவர் உத்தரவு

image

பரிவர்த்தனைக்காக வரும் சொத்து பத்திரங்களின் சரிபார்ப்பு நிலவரத்தை, அதை வாங்குவோர் தெரிந்துகொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பத்திரங்களில் பிழை இருப்பதாகக் கூறி மக்களை அலைக்கழிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த உத்தரவை சார்-பதிவாளர்கள் கடைப்பிடிப்பதை மாவட்ட பதிவாளர்கள், டிஐஜிக்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Similar News

News December 14, 2025

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: UPDATE

image

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் நேற்று இரவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன இதன்படி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18ஆம் தேதி குமாரபாளையம் பகுதியில் நடைபெற உள்ளதாகவும். இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

News December 14, 2025

சற்றுமுன்: பிரபல வில்லன் நடிகர் காலமானார்

image

தி மாஸ்க், பல்ப் ஃபிக்சன் உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த ஹாலிவுட் நடிகர் பீட்டர் கிரீன்(60) மர்மமான முறையில் உயிரிழந்தார். நியூயார்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிடந்த அவரது சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, பீட்டர் கிரீன் மறைவுக்கு ஹாலிவுட், பாலிவுட் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News December 14, 2025

மோடிக்கு தமிழ் மீது அக்கறை இல்லை: கார்த்தி சிதம்பரம்

image

ஒரு மாநிலத்தின் தேர்தல் இலக்கணம் மற்றொரு மாநிலத்துக்கு பொருந்தாது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தேர்தல் வரும்போது தமிழகத்திற்கு அடிக்கடி வரும் மோடி, அமித்ஷா தமிழ் உணவு, தமிழ் மொழிதான் பிடிக்கும் என்பார்கள். ஆனால் உண்மையில் புலம்பெயரும் பறவைகளைப் போல தேர்தலுக்காக வந்துவிட்டு செல்வார்களே தவிர, அவர்களுக்கு தமிழ், தமிழகத்தை பற்றி எந்த அக்கறையும் இருக்காது எனவும் விமர்சித்தார்.

error: Content is protected !!