News May 9, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 143 ▶குறள்: விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துதொழுகு வார். ▶பொருள்: நம்பி பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.

News May 9, 2024

இந்த சாதனையும் SRH வசம்தான்

image

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 9.4 ஓவரில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணியின் கைவசம் 62 பந்துகள் மீதம் இருந்தது. இந்நிலையில், 100+ ரன்களை விரட்டி ஆடுகையில், அதிக பந்துகளை மீதம் வைத்த அணி என்ற சாதனையை SRH படைத்துள்ளது. இதற்கு முன்பாக 2022இல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 116 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய டெல்லி அணி 57 பந்துகள் மீதம் இருக்கையில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.

News May 9, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News May 9, 2024

குறைந்த பந்தில் 100 ரன்கள் சாதனை

image

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி பல சாதனைகள் படைத்துள்ளது. இதில் ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஜோடி 34 பந்தில் 100 ரன்கள் எடுத்து அசத்தினர். இதன்மூலம் நடப்பு தொடரில் இரண்டாவது முறையாக குறைந்த பந்தில் 100 ரன்கள் எடுத்த ஜோடி என்ற சாதனையைப் படைத்தனர். முன்னதாக டெல்லிக்கு எதிரான போட்டியில் 31 பந்தில் 100 ரன்கள் எடுத்தது இந்த ஜோடி.

News May 9, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News May 9, 2024

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால்

image

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருந்தாலும், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என காங்., வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவு தலைவர் பிட்ரோடா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மோடி, தமிழர்களின் பெருமையைக் காக்க காங்., உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள முதல்வர் ஸ்டாலின் தயாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஸ்டாலினுக்கு துணிச்சல் உள்ளதா என்றும் சவால் விடுத்துள்ளார்.

News May 9, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News May 9, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

* உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது
* தமிழக பதிவுத்துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்வு.
* முன்னாள் பாஜக எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்
* தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என அறிவிப்பு.
* லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் SRH அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

News May 9, 2024

கூகுளின் பிக்சல் 8a மாடல் ஃபோன் இந்தியாவில் அறிமுகம்

image

AI வசதியுடன் கூடிய கூகுளின் பிக்சல் 8a மாடல் ஃபோன் இந்தியாவில் அறிமுகமானது. 6.1 இன்ச் ஸ்கிரீன் மற்றும் OLED டிஸ்பிளே உடன் வரும் இந்த ஃபோன், 4492 mAh பேட்டரியை கொண்டது. 64 மெகாபிக்சல் மெயின் லென்ஸும், 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸும்,13 மெகாபிக்சல் செல்பி கேமராவும் இதில் உள்ளது. 2 வேரியணட்களாக விற்பனைக்கு வந்துள்ளது. 128ஜிபி வெர்ஷன் ₹.52,999க்கும், 256ஜிபி வெர்ஷன் ₹.59,999 விற்கப்படுகிறது.

News May 9, 2024

என் வாழ்நாள் சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்

image

டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் நான் செய்த வாழ்நாள் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் விரைவில் முறியடிப்பார் என்று SRH அணியின் பயிற்சியாளர் பிரையன் லாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “தனித்தன்மையுடன் இருக்கும் ஜெய்ஸ்வால் ஒரு அற்புதமான வீரர். சீனியர்களிடம் மிகவும் பணிவாக நடந்துகொள்ளும் அவர், புதிய நுணுக்கங்களைக் கற்பதில் ஆர்வமாக இருக்கிறார் ” எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!