India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை விடுமுறையைக் கழிக்க பலரும் தீவுப் பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்ல விரும்புகின்றனர். அவர்களுக்காகவே, இந்த ஆண்டுக்கான சிறந்த தீவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, தாய்லாந்தில் உள்ள ஃபூகெட் தீவு முதலிடம் பிடித்துள்ளது. தான்சானியாவில் உள்ள சான்சிபார், கிரீஸில் உள்ள கிரீட், கரீபியனில் உள்ள புவேர்ட்டோ ரிக்கோ, ஸ்பெயினில் உள்ள மஜோர்கா ஆகிய தீவுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
SRH-க்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால், LSG அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ராகுலை கடிந்து கொள்ளும் வீடியோ பேசுபொருளாகியுள்ளது. தோல்விக்கு கேப்டன் என்ற முறையில் ராகுல் பொறுப்பேற்க வேண்டும் என்றாலும், தனியறையில் நடக்க வேண்டிய இதுபோன்ற நிகழ்வு பொதுவெளியில் நடந்ததை ஏற்கமுடியாது. அவரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என கோயங்காவுக்கு எதிராக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய், தனது முதல் அரசியல் மாநாட்டை மதுரையில் நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகவுள்ள விஜய், முதல் மாநாட்டைத் தனது பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரீரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ‘கில்லி’ திரைப்படம் திரையரங்க உரிமையாளர்களே எதிர்பார்க்காத அளவில், வசூலை அள்ளிக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு படங்களை ரீரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. அந்த வகையில், விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளியான ‘சச்சின்’ படத்தை மீண்டும் திரைக்கு கொண்டுவரும் பணிகள் நடந்து வருகின்றன.
நாளை அட்சய திருதியை முன்னிட்டு, நகை வாங்க மக்கள் ஆர்வமுடன் உள்ள நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹120 குறைந்து ₹52,920க்கும், கிராமுக்கு ₹15 குறைந்து ₹6,615க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசு அதிகரித்து ₹88.70க்கு விற்பனையாகிறது. அட்சய திருதியையொட்டி நாளையும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் இருந்து ஹஜ் பயணிகளின் புனித பயணம் இன்று முதல் தொடங்கியது. இந்தாண்டு சவுதி அரேபியாவுக்கு சுமார் 1.75 லட்சம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை புறப்பட்ட முதல் விமானத்தில் 285 பயணிகள் ஹஜ்ஜிற்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். அதற்கு முன்னதாக, ஜெட்டா மற்றும் மதீனா நகரங்களில் ஹஜ் பயணித்திற்கான ஏற்பாடுகள் மறு ஆய்வு செய்யப்பட்டது.
ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிலையில், ஏப்.8இல் மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் மே 15 முதல் ஜூன் 20-ம்தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்கான அழைப்பாணையை தேர்வாணைய இணையத்தில் பெறலாம். இதில், கலந்துக்கொள்ள தவறினால் மறு வாய்ப்பு வழங்கப்படாது.
மக்களை பிளவுப்படுத்தி பேசுவது பிரதமர் மோடிக்கு அழகல்ல என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சர்ச்சையான கருத்துகளை தெரிவித்த சாம் பிட்ரோடா காங்கிரசில் முக்கியமானவர் கிடையாது. அவரின் கருத்துக்கும், காங்கிரசுக்கும் தொடர்பில்லை எனக் கூறிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் கதாநாயகன் காங்., தேர்தல் அறிக்கை தான். இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக பாஜகவினர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்தார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. அண்ணாநகர், கொளத்தூர், அடையாறு, மயிலாப்பூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, கோயம்பேடு, வடபழனி, தரமணி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், நேற்றும், இன்றும் தொடர்ந்து மழை பெய்வதால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால், ஃபேன், ஏசி இல்லாமல் மக்களால் இருக்க முடியவில்லை. பொதுவாக ஏசியை பயன்படுத்தும்போது மின்கட்டணம் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரிக்கும். இதனால், பயனாளர்கள் மின்கட்டணத்தை குறைக்க மின்வாரியம் புது யோசனையை கொடுத்துள்ளது. அதாவது AC-யை 24-26 டிகிரி செல்சியஸில் வைப்பதன் மூலம் 36% மின் கட்டணத்தை சேமிக்கலாம். இதை இன்றே உறுதி செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.