News May 9, 2024
மோடிக்கு இது அழகல்ல: ஈவிகேஎஸ்

மக்களை பிளவுப்படுத்தி பேசுவது பிரதமர் மோடிக்கு அழகல்ல என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சர்ச்சையான கருத்துகளை தெரிவித்த சாம் பிட்ரோடா காங்கிரசில் முக்கியமானவர் கிடையாது. அவரின் கருத்துக்கும், காங்கிரசுக்கும் தொடர்பில்லை எனக் கூறிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் கதாநாயகன் காங்., தேர்தல் அறிக்கை தான். இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக பாஜகவினர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்தார்.
Similar News
News April 10, 2026
இஸ்ரேல் vs பாகிஸ்தான்.. வெடித்த வார்த்தைப் போர்

யூத வெறுப்பு கொண்ட பாகிஸ்தான் எப்படி மத்தியஸ்தம் செய்ய முடியும் என இஸ்ரேல் கேள்வி எழுப்பியுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் – இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, புற்றுநோய் போன்ற கொடிய நாடான இஸ்ரேல் நரகத்தில் எரிய வேண்டுமென பாக்., பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சாடியிருந்தார்.

ஆசிரியர்கள் அதிர்ச்சி.. அறிவித்தது தமிழக அரசு

கல்வியாண்டுக்கு நடுவே ஓய்வுபெறும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு செய்யப்படுவது வழக்கம். ஆனால், தேர்வுமுடியும் வரையே பணிநீட்டிப்பு என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது ஏப்ரலுடன் முடிவடைவதால், ஓய்வுபெறுவோருக்கு மே மாதம் சம்பளம் கிடைக்காது. 3 ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும், தற்போதுதான் இது நடைமுறைக்கு வந்துள்ளது.