India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒரே பள்ளியில், ஒரு வகுப்பில் படித்த இரட்டைச் சகோதரிகள், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுத் தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வித் துறை இன்று காலை 9.30 மணிக்கு வெளியிட்டது. இதில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த அட்சயா மற்றும் அகல்யா, 500க்கு 463 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் வியப்படையச் செய்துள்ளனர்.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக விநாடிக்கு 3,000 கன அடி நீரை திறந்துள்ளதால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வைகை அணை தண்ணீர் செல்லும் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு 5 முஸ்லிம் நாடுகள் உயரிய விருது அளித்து கவுரவித்திருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் மோடியை மதிப்பதாகவும், 5 அரேபிய முஸ்லிம் நாடுகள் உயரிய விருது அளித்து கவுரவித்துள்ளதாகவும், இதுபோல் அந்நாடுகள் வேறு எந்த தலைவருக்கும் விருது அளித்ததில்லை என்றும் கூறினார்.
கோலி உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அனில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் இருந்த இடைவெளியை எல்லாம் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கோலி சரிசெய்து ரன்களை குவித்து வருவதாக கூறிய அவர், இந்த உலகக் கோப்பையில் அவரின் அனுபவம் இந்திய அணிக்கு பெரிதும் உதவும் என்றார். மேலும், பெங்களூரு அணி ப்ளே-ஆஃப்சுற்றுக்கு தகுதி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
வழக்கமாக தங்கம் விலை காலை, மாலை என 2 நேரங்களில் மட்டுமே மாற்றியமைக்கப்படும். அதன்பிறகு இந்த வழக்கம், நாளொன்றுக்கு ஒரு முறையாக குறைந்தது. ஆனால், அட்சய திரிதியை நாளான இன்று வழக்கத்துக்கு மாறாக இதுவரை 3 முறை விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்றைய விலையை பார்த்து அதற்கேற்ப பணத்துடன் நகை வாங்க கடைக்கு வந்த மக்கள், இந்த புதிய வழக்கத்தால் என்ன செய்வதென தெரியாமல் குழப்பமடைந்தனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ-வின் ஆவணங்களை போலியாகத் தயாரித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் 6ஆவது முறை கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி, போலி ஆவணங்கள் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சைபர் கிரைம் போலீசார் ஏற்கெனவே 2 வழக்குகள் பதிந்து கைது செய்துள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.
உடல் எடையைக் கூட்டுவதற்காக புரதச்சத்து பவுடர்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, அதிக உப்பு, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்க வேண்டும் எனவும், உணவு லேபிள்களில் உள்ள தகவல்களைப் படிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. புரதச்சத்து பொடிகளை தொடர்ந்து உட்கொள்வது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம் என எச்சரித்துள்ளது.
அட்சய திருதியையொட்டி ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் 3ஆவது முறையாக உயர்ந்துள்ளது. காலையில், முதலில் சவரனுக்கு ₹360 உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 2ஆவது முறையாக மீண்டும் ₹360 அதிகரித்தது. இதைத் தொடர்ந்து 3ஆவது முறையாக ₹520 உயர்ந்துள்ளது. இதனால், சென்னையில் 1 சவரன் தங்கம் விலை ₹54,160ஆக விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரே நாளில் ₹1,240 உயர்ந்துள்ளது.
உ.பி.யின் நொய்டாவில் வெப் சீரிஸ் பார்த்து ஓட்டல் உரிமையாளரின் 15 வயது மகனை முன் விரோதத்தால் கடத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில், மருத்துவ மாணவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு முன்னதாக, குஜராத்தில் டிவி சீரியல் பார்த்து 13 வயது சிறுவன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், வெப் தொடர்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது.
தனது தந்தையின் நீண்டநாள் கனவு நிறைவேறியுள்ளதாக நடிகர் பாண்டியனின் மகனும், ‘ஸ்டார்’ பட இயக்குநருமான இளன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இப்படத்தில் தனது அப்பா திரையில் தோன்றியபோது அரங்கம் அதிர ஒலித்த கைத்தட்டலால் இன்றைய நாள் தனக்கு சிறப்பாக அமைந்ததாகக் கூறியுள்ளார். தன் வாழ்வில் எப்போதும் இது சிறந்த தருணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.