News May 10, 2024
எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறதா வெப் சீரிஸ்?

உ.பி.யின் நொய்டாவில் வெப் சீரிஸ் பார்த்து ஓட்டல் உரிமையாளரின் 15 வயது மகனை முன் விரோதத்தால் கடத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில், மருத்துவ மாணவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு முன்னதாக, குஜராத்தில் டிவி சீரியல் பார்த்து 13 வயது சிறுவன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், வெப் தொடர்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது.
Similar News
News July 7, 2025
இந்திய வம்சாவளிக்கு பொறுப்பு: எலான் மஸ்க் அதிரடி

அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், பொருளாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த வைபவ் தனேஜாவை நியமித்துள்ளார். டெல்லியில் பிறந்த இவர், தனது இளநிலை படிப்பை டெல்லி பல்கலைகழகத்தில் முடித்துவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த 8 வருடங்களாக டெஸ்லாவில் பணிபுரிந்தும் வருகிறார். கட்சியின் முக்கிய பொறுப்பில் வெளிநாட்டவர் நியமிப்பதா என எலான் மஸ்க் மீது விமர்சனங்களும் வந்துள்ளன.
News July 7, 2025
இன்றைய நேரம் நல்ல நேரம்

▶ஜூலை 7- ஆனி – 23▶ கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶ எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: துவாதசி▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.
News July 7, 2025
காதலரைக் கடத்தும் பெண் வீட்டார்.. வினோத பழக்கம்

மேகாலயாவில் உள்ள காரோ பழங்குடியினரிடம் ஒரு வித்தியாசமான திருமண பழக்கம் பின்பற்றப்படுகிறது. ஒரு பெண்ணே தனது காதல் விருப்பத்தை முதலில் வெளிப்படுத்துகிறார். தனக்கு பிடித்த நபர் யார் எனக் கூறினால், அவளது உறவினர்கள் அந்த நபரை பிடித்துக்கொண்டு பெண் வீட்டுக்கு வருகின்றனர். இதனையடுத்து, அவருக்கு அப்பெண்ணை பிடித்தால் அடுத்த கட்டத்திற்கு திருமணம் செல்லும். இல்லையெனில் கைவிடப்படும். இது எப்படி இருக்கு?