News May 13, 2024

‘சன் ஸ்கிரீன்’ அவசியமா?

image

சூரிய ஒளியின் கதிர்வீச்சு நம்முடைய சருமத்தை பாதிக்காமல் பாதுக்காக்க ‘சன் ஸ்கிரீன்’ பலராலும் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, வெளிர் தோல் கொண்டிருக்கும் மேலை நாட்டினருக்கே சன் ஸ்கிரீன் அவசியம் என்றும் இந்தியா போன்ற அடர் நிறத் தோலை கொண்டிருக்கும் நாட்டிற்கு சன் ஸ்கிரீன் அவசியம் இல்லை என்றும், நம்முடைய தோலில் இருக்கும் மெலனின் போதுமானது எனவும் கூறுகின்றனர்.

News May 13, 2024

நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்?

image

நெல்லை விரைவு ரயிலில் பிடிப்பட்ட ₹4 கோடி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், ₹4 கோடி கடத்தலில் ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் செய்ய நயினாரின் எம்எல்ஏ அட்டை பயன்படுத்தப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளதால், அவருக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News May 13, 2024

‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் புதின் பட ட்ரெய்லர்

image

ரஷ்ய அதிபர் புதினின் வாழ்க்கை, AI தொழில்நுட்பம் மூலம் படமாகத் தயாராகி வருகிறது. போலந்தைச் சேர்ந்த நடிகர் புதின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், பிறகு AI மூலம் அவரது முகத்தை புதினாக மாற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. உக்ரைன் போர் உள்ளிட்ட காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

News May 13, 2024

புரட்டி எடுக்கும் கோடை மழை

image

தமிழ்நாட்டில் கோடை மழை தாமதமாக தொடங்கினாலும் வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சிவகிரியில் 12 செ.மீ., மழை பதிவாகியிருக்கிறது. குமரி மாவட்டம் சித்தாறு மற்றும் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டம் எழுமலை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதிகளில் 7 செ.மீ.., மழையும் மதுரை மாவட்டம் குன்னம்பட்டியில் 6 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது

News May 13, 2024

தமிழ்நாடு அணியின் அடுத்த கோச் யார்?

image

தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் லக்‌ஷ்மிபதி பாலாஜி நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது சுலக்‌ஷன் குல்கர்னி பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவர், விரைவில் ஓய்வு பெற இருப்பதால் அவருக்கு அடுத்த பதவியில் இருக்கும் பாலாஜி, தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

News May 13, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

5 மணி நேரம் துன்புறுத்தப்பட்டு ஜெயக்குமார் கொலை?

image

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு 4-5 மணிநேரம் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என உடற்கூறாய்வு முடிவில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. வயிற்றில் இரும்பு தகடு, கடப்பா கல் போன்றவை கட்டப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் உடல் கிடைத்ததாகவும், நீர் நிலைகளில் போடுவதற்காக உடல் கட்டப்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. உடல் கிடந்த இடத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் கடல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 13, 2024

₹1500 கோடிக்கு விலை போகும் தலைமுடி

image

2023ஆம் ஆண்டில் ₹1500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியர்களின் தலைமுடி ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டு இது வெறும் ₹290 கோடியாக இருந்தது. இந்த வகை முடிகள் செயற்கை விக் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் செயற்கை முடிக்கான தேவை அதிகரித்திருப்பதால் முடிகளின் தேவை அதிகரித்துள்ளது. அதனை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா திகழ்கிறது.

News May 13, 2024

விலையில்லா பயணத்தால் பாதிக்கப்படும் மெட்ரோ

image

தெலங்கானாவில் டிசம்பர் மாதம் மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, நவம்பர் மாதம் 5.5 லட்சமாக இருந்த ஹைதராபாத் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் 4.6 லட்சமாக குறைந்தது. அரசின் இந்த முடிவால் ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் இருந்து விலக L&T நிறுவனம் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தால், அவர்களின் லாபம் குறைவதாக L&T குற்றம்சாட்டியுள்ளது.

News May 13, 2024

காலை 9 மணி வரை 10.35% வாக்குப்பதிவு

image

4ஆம் கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 10.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆந்திரா – 9.05%, பிஹார் -10.18%, காஷ்மீர் – 5.07%, ஜார்க்கண்ட் – 11.78%, மத்தியப்பிரதேசம் – 14.97%, மகாராஷ்டிரா – 6.45%, ஒடிசா – 9.23%, தெலங்கானா – 9.51%, உத்தரப் பிரதேசம் – 11.67%, மேற்கு வங்கம் – 15.24% வாக்குகள் பதிவாகியுள்ளன. சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் ஆந்திரா – 9.21%, ஒடிசா – 9.25% வாக்குகள் பதிவாகியுள்ளன.

error: Content is protected !!