News May 13, 2024

ஆம் ஆத்மி எம்பியை தாக்கிய கெஜ்ரிவால் உதவியாளர்?

image

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பியும், டெல்லி முன்னாள் மகளிர் ஆணைய தலைவியுமான ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவாலின் உதவியாளர் விபவ் குமார் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் இல்லத்தில் வைத்து அவர் தாக்கப்பட்டதாகவும், இதையடுத்து அவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்ததாகவும், பிறகு காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த அவர், திரும்பிச் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

News May 13, 2024

நாளை கடைசி: ரயில்வேயில் 4,660 காலிப்பணியிடங்கள்

image

RPFஇல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பிக்க நாளை (மே 14) கடைசி நாளாகும். SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தேர்வு நடைபெறும். <>https://www.rrbapply.gov.in/<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News May 13, 2024

ஆளுநர் மாளிகை உத்தரவு பிறப்பிக்கவில்லை

image

அண்ணாமலை மீது வழக்குத் தொடர அனுமதிப்பது குறித்து, ஆளுநர் மாளிகை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என ராஜ்பவன் விளக்கமளித்துள்ளது. அண்ணாமலை மீது, பியூஸ் மானுஷ் என்பவர் வெறுப்புப் பேச்சு தொடர்பாக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில், மேல்நடவடிக்கைக்கு ராஜ்பவன் அனுமதி அளித்ததாக வெளியான தகவலை மறுத்துள்ள ராஜ்பவன், அதுபோன்ற செய்தியில் உண்மை இல்லை எனக் கூறியுள்ளது.

News May 13, 2024

பாஜகவுக்கு எதுவும் உதவப்போவதில்லை

image

தெலங்கானாவில் வாக்களிக்க வந்த இஸ்லாமியப் பெண்களின் ஆதார் கார்டை சரிபார்த்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் செயல் குறித்து அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார். தான் அந்த வீடியோவை பார்க்கவில்லை என்றும், பாஜக திட்டமிட்டு இஸ்லாமியர்களின் வாக்குகளை சிதைக்க முயற்சிக்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இச்செயல்கள் அனைத்தும் அசாதுதீன் ஓவைசிக்கு உதவப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

News May 13, 2024

தலித் இடஒதுக்கீட்டை பறிக்க விட மாட்டேன்

image

தலித், பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் இடஒதுக்கீட்டை பறிக்க விட மாட்டேன் என்று மோடி தெரிவித்துள்ளார். பிகாரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், வாக்குகளுக்காக திருப்திபடுத்தும் அரசியலை காங்கிரஸும், ஆர்ஜேடி கட்சியும் செய்வதாகவும், அதற்கு அடிமையாகி விட்டதாகவும் விமர்சித்தார். முஸ்லிம்களுக்கே நாட்டின் சொத்துக்கள் மீது முதல் உரிமை உள்ளதென காங்கிரஸ் கூறுவதாகவும் குறிப்பிட்டார்.

News May 13, 2024

9 மாவட்டங்களில் கனமழை பெய்கிறது

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி , கோடை வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை, குமரி, தேனி, திண்டுக்கல், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மழை பெய்து வருகிறது.

News May 13, 2024

பிரதமர் மோடி தயங்குவது ஏன்?

image

ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமருடனான விவாதத்திற்கு ராகுல் காந்தி தயார் என கூறினார். ஆனால், பிரதமர் மோடியிடம் இருந்து பதில் வராத நிலையில், பிரதமர் தயங்குவது ஏன் என தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பிரதமருக்கு துணிவில்லாததால், விவாதத்திற்கு வரவில்லை என்ற அவர், மடியில் கனமிருப்பதாலேயே அவர் தயங்குகிறார் என சாடியுள்ளார்.

News May 13, 2024

நாடு முழுவதும் மோடி அலை

image

நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு சாதகமான அலை வீசுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். லடாக்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடி அலை வீசுவதால் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை காட்டிலும் இந்தத் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றார். வழக்கில் இருந்து கெஜ்ரிவால் இன்னும் விடுபடவில்லை என்பதால், அவரை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

News May 13, 2024

நடிகர் சங்கத்திற்கு ₹1 கோடி வழங்கினார் தனுஷ்

image

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக நடிகர் தனுஷ் ₹1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். நிதி நெருக்கடி காரணமாக பல ஆண்டுகளாக கட்டப்படாமல் இருக்கும் இக்கட்டடத்தை கட்டி முடிக்க, ₹40 கோடி தேவைப்படுவதாக அண்மையில் நாசர் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, நடிகர்கள் விஜய், கமல்ஹாசன், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் ₹1 கோடி நிதியுதவி வழங்கினார். அந்த வரிசையில் தற்போது தனுஷும் நிதியுதவி வழங்கியுள்ளார்.

News May 13, 2024

பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு

image

தெலங்கானாவில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் ஆதார் அட்டையை வாங்கி பாஜக வேட்பாளர் மாதவி லதா சோதனை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மாதவி லதா மீது 171C, 186, 505(1)(c) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஹைதராபாத் மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!