News May 13, 2024
9 மாவட்டங்களில் கனமழை பெய்கிறது

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி , கோடை வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை, குமரி, தேனி, திண்டுக்கல், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மழை பெய்து வருகிறது.
Similar News
News December 8, 2025
Cinema Roundup: லோகேஷ் – அமீர்கான் படம் டிராப்பா?

*‘தேவதையை கண்டேன்’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அதன் தயாரிப்பாளர் அறிவிப்பு. *‘திரிஷ்யம் 3’ படத்தின் தியேட்டர் மற்றும் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமைகளை பென் ஸ்டுடியோஸ் மற்றும் பெனரோமா ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது. *தன்னை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படம் டிராப் ஆகவில்லை என அமீர்கான் அறிவிப்பு. *பிக்பாஸ் இந்தி சீசன் 19 டைட்டில் வின்னரானார் இளம் நடிகர் கௌரவ் கண்ணா.
News December 8, 2025
விரைவில் ஆண்களுக்கும் விடியல் பயணம்?

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களை கவர அரசு பல திட்டங்களை பரிசீலித்து வருகிறது. அந்த வகையில், மகளிர் விடியல் பயணத்தை போல, ஆண்களுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான விடியல் பயண திட்டம் குறித்த அறிவிப்பு, அடுத்த ஓரிரு மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 8, 2025
நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம்

தேசிய பாடலான வந்தேமாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. லோக்சபாவில் மதியம் 12 மணிக்கு விவாதத்தை தொடங்கி வைத்து PM மோடி உரையாற்ற உள்ளார். ராஜ்யசபாவில் அமித்ஷா விவாதத்தை தொடங்கி வைக்க உள்ளார். சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த ‘வந்தே மாதரம்’ பாடலின் வரலாறு, கலாச்சார முக்கியத்துவம் குறித்து MP-க்கள் பேச உள்ளனர்.


