News May 14, 2024

வெயிலால் மரணம்: பிரேத பரிசோதனை தேவையில்லை

image

வெயிலால் மரணமடைவோருக்கான இறப்பு சான்றிதழ் பெற பிரேத பரிசோதனை கட்டாயமில்லை என்று தேசிய நோய் தடுப்பு ஆணையம் (NCDC) தெரிவித்துள்ளது. அந்த ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதலில், வெயில் மரணங்களுக்கான இறப்பு சான்றிதழை அளிக்கையில், வெப்பம் அதிகரித்ததால் மரணம் அல்லது ஹைபர்தெர்மியா என குறிப்பிட்டு சான்றிதழ் அளிக்கலாம், பிரேத பரிசோதனை கட்டாயமில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

News May 14, 2024

மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவுதான்

image

பிரதமர் மோடி தன்னிடம் ₹3.02 கோடி சொத்து உள்ளதாகவும், கையில் ரொக்கமாக ₹52,920 பணம் உள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இன்று வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த அவர், ₹2.67 லட்சம் மதிப்பில் 4 தங்க மோதிரங்கள் உள்ளதாகவும், தன்னிடம் சொந்தமாகக் கார் கூட இல்லை என்றும் அவர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். முந்தைய தேர்தலில் பிரதமரின் சொத்து மதிப்பு ₹2.51 கோடியாக இருந்தது.

News May 14, 2024

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு மே 28க்கு ஒத்திவைப்பு

image

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், இன்றைய விசாரணையில் பள்ளி முதல்வர், தாளாளர் ஆஜராகினர். அப்போது மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு, மாணவியின் மொபைல் உரையாடலை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மே 28க்கு ஒத்திவைத்தனர்.

News May 14, 2024

ஜூன் 7 வரை ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு

image

ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிப்போவதால், கடந்த 10ஆம் தேதி முதல் அஜித் இப்படத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜூன் 7ஆம் தேதி வரை முதல்கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

News May 14, 2024

அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததால் கைது

image

அதிமுகவுக்கு ஆதரவாகப் பேசியதால் தான் சவுக்கு சங்கர், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக நடிகையும், அதிமுக நிர்வாகியுமான விந்தியா குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சினிமாத் துறை மட்டுமின்றி, எந்தத் துறையும் சுதந்திரமாக இயங்கியது இல்லை எனக் குற்றம்சாட்டிய அவர், தமிழகம் முழுவதும் கஞ்சா வழக்கில் யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் என்றார்.

News May 14, 2024

மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் தாெழில்நுட்பம்

image

மனதில் நினைப்பதை 79% துல்லியமாக கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். supramarginal gyrus என்ற தொழில்நுட்ப அடிப்படையில் உருவான சாதனத்தை, பேசும் திறனற்ற 2 பேரின் முளைப்பகுதி அருகே பொருத்தி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அவர்கள் நினைப்பதை மூளையில் இருந்து சிக்னல் மூலம் கிரகித்து மொழிபெயர்த்து, எழுத்தாக பதிவு செய்தது.

News May 14, 2024

டி20 உலகக் கோப்பையில் புதிய விதிகள்

image

டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஜூன் 2 – 29 வரை நடைபெறுகின்றன. இதில் இந்த ஆண்டு முதல் புதிய விதிகள் அமல்படுத்தப்படுகின்றன. முதல் அரையிறுதிப் போட்டிக்கு 1 நாள் ரிசர்வ் டே ஒதுக்கப்படும். 2ஆவது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது. ஆனால், மழை குறுக்கிட்டால் கூடுதலாக 250 நிமிடங்கள் ஒதுக்கப்படும். இருப்பினும் மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் சூப்பர் 8இல் அதிக புள்ளிகள் பெற்ற அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும்.

News May 14, 2024

கட்டண உயர்வை தடுக்க நடவடிக்கை தேவை

image

முன்னறிவிப்பின்றி அரசுப் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தியதாக தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான X பதிவில், விரைவுப் பேருந்து என்ற பெயரில் குறைந்த தூரத்திற்கு இயக்கப்படும் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகக் குற்றம்சாட்டினார். கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

News May 14, 2024

சவுக்கு சங்கரின் காவல் நீட்டிப்பு

image

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சைபர் கிரைம் காவல்துறையின் ஒருநாள் காவல் முடிந்த நிலையில் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சங்கரை மே 28 வரை நீதிமன்றத் காவலில் வைக்க உத்தரவிட்ட கோவை குற்றவியல் நீதிமன்றம் இவ்வழக்கை ஒத்திவைத்தது.

News May 14, 2024

அண்டவெளியில் கடவுளின் கை

image

சிலியில் கடல் மட்டத்தில் இருந்து 7,200 அடி உயரத்தில் பொருத்தப்பட்ட தொலைநோக்கி மூலம் அண்டவெளியை படம் எடுத்தபோது, 100 மில்லியன் ஒளி ஆண்டு பயணத் தூரத்துக்கு அப்பாலுள்ள கிரகத்தை நோக்கி பெரிய கை நீளும் காட்சி பதிவானது. தூசு, வாயு கலவையான அது, பிரமாண்ட உருவம் எதையோ நோக்கி கை நீட்டுவது போல இருந்தது. அதற்கு கடவுளின் பெயர் என பெயரிடப்பட்டுள்ளது. 1976லிலும் இதேபோல் காட்சி பதிவானது.

error: Content is protected !!