India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்காக இன்றும், மே 20ஆம் தேதியும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யவிருக்கிறது. தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யவிருக்கிறது. வடக்கு மாவட்டங்களில் மட்டும் அதிக மழையை எதிர்பார்க்க முடியாது.
பெண் காவலர்கள் குறித்து அவதூறு வீடியோவை ஒளிபரப்பிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்டதால் அவரது முன் ஜாமின் மனு காலாவதியானதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், ஃபெலிக்ஸ் கைது மற்றும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக அவரது மனைவி முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட், 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது. இன்று கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் 21 செ.மீட்டருக்கு மேல் அதிகனமழை பெய்யும் என்றும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சிறையிலிருந்து கெஜ்ரிவால் வெளியே வந்ததால் காங்கிரசுக்குதான் பாதிப்பு, பாஜகவுக்கு அல்ல என அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலின் பிரசாரம் டெல்லி, பஞ்சாப் தேர்தலில் மட்டுமே எதிரொலிக்கும் எனக் கூறிய அவர், பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அதிகரிப்பதால், அங்கு தனித்து நிற்கும் காங்கிரசுக்கு பாதிப்பு என்றார். அங்கு பாஜகவுக்கு வாய்ப்புகள் குறைவு எனவும் அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கை ஜூலை 10ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அமலாக்கதுறை தரப்பில் வாதாடும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், வேறு ஒரு வழக்கில் வாதிட்டு வருவதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ED கோரிக்கையை ஏற்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியாவின் தேர்தலை உலகமே உற்று நோக்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் அசம்கரில் பிரசாரம் செய்த அவர், இந்தியாவின் தேர்தல் குறித்த செய்திகள் முதல்முறையாக உலக செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் இடம்பெறுவதாகக் கூறினார். இதில் இருந்து நமது தேர்தலின் முக்கியத்துவத்தை உணரலாம் எனக் கூறிய அவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களின் பேராதரவு இருப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி கருத்துகளை பரிமாற்ற வேண்டும் என்றும், தேர்ச்சி விகிதம் 100% இலக்கை எட்ட வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மழை வெள்ளம் இருக்கும் பகுதிகளை விடுத்து மாற்று வழியில் அரசுப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை, நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து பழுதாகி நின்றது. இந்நிலையில், அனைத்து ஓட்டுநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கும் போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை கவனத்துடன் இயக்க உத்தரவிட்டுள்ளது.
கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவித்திருந்த நிலையில், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளராக கங்கனா ரனாவத் மண்டி தொகுதியில் போட்டியிடுவதால், படத்தின் பணிகள் தாமதம் ஆவதாக கூறப்படுகிறது. இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார்.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவித்துள்ள நிலையில், X தளத்தில் Happy Retirement Legend என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர் கோலி உள்ளிட்ட பிரபலங்களும் அவருக்கு அன்பை பரிமாறியுள்ளனர். தனது சகோதரரை நினைத்து பெருமை கொள்வதாக X பக்கத்தில் கோலி பதிவிட்டுள்ளார். குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்றுப் போட்டியுடன் அவர் ஓய்வு பெறுகிறார்.
Sorry, no posts matched your criteria.