News May 17, 2024

வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா

image

டி20 உலகக் கோப்பைத் தொடர் வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் தொடங்க உள்ளது. மே 26ஆம் தேதியுடன் ஐபிஎல் தொடர் நிறைவடைய உள்ளதால், இந்திய அணி வீரர்கள் இரண்டு குழுக்களாக அமெரிக்கா செல்ல உள்ளனர். 27ஆம் தேதியில் இருந்து உலகக் கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் தொடங்க உள்ளன. வரும் ஜூன் 1ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா முதல் பயிற்சி போட்டியை எதிர்கொள்ள உள்ளது.

News May 17, 2024

‘சூர்யா 44’ படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே

image

சூர்யா நடிக்க உள்ள 44ஆவது படத்தில், நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, வரும் 2ஆம் தேதி அந்தமானில் தொடங்க உள்ளது. அங்கு, 40 நாள்கள் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாகவும், 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.

News May 17, 2024

குழந்தை பாக்கியம் அருளும் பழமுதிர்ச்சோலை

image

முருகனின் அறுபடை வீடுகளில் இறுதியானது அழகர் மலை. சுட்டப்பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்ட சுட்டிப்பையன், முருகப்பெருமான் என்பதை ஒளவை அறிந்து கொண்ட இடம் இந்த பழமுதிர்ச்சோலை. வாழ்க்கைக்கு கல்வி அறிவுடன் இறையருள் என்னும் மெய் அறிவு அவசியம் என்பதை உணர்த்திய இடமும் இதுதான். திருமணத் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு சென்று வழிபடலாம்.

News May 17, 2024

பாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்களா?

image

ஓட்டுக்காக ஒவ்வொரு செயல்களையும் செய்யும் பழக்கத்தை நாட்டில் ஒழிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்விக்கு சிறப்பு நேர்காணலில் பதில் அளித்த அவர், நாட்டிற்காக அல்லாமல், வாக்குக்காக எல்லாவற்றையும் செய்வீர்களா என கேள்வி எழுப்பினார். தான் எதை செய்தாலும் நாட்டுக்காக செய்வதாகவும், வாக்கு என்பது அதன் துணை கருவி மட்டுமே எனவும் அவர் கூறினார்.

News May 17, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் மழை

image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

ஓட்ஸ் சாப்பிட்டால் பிரச்னைகள் ஏற்படுமா?

image

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பொன்மொழி ஓட்ஸுக்கும் பொருந்தும். ஒரு மனிதர் சராசரியாக ஒரு நாளில் 30-35 கிராம் அளவில் (Instant oats) ஓட்ஸை எடுத்துக் கொள்ளலாம். அதிகளவில் ஓட்ஸ் சாப்பிட்டால், செரிமான அசௌகர்யத்தையும், சர்க்கரை அளவையும் அதிகரிக்கும். மேலும், ஓட்ஸில் இருக்கும் அதிக பாஸ்பரஸ் சத்து, சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு தொந்தரவுகளை வரவழைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News May 17, 2024

குரு தோஷ பரிகார தலங்கள்

image

ஒருவரது ஜாதகத்தில் குரு தோஷம் இருந்தால், கீழ்காணும் கோயில்களுக்கு சென்று மனதுருக வழிபாடு நடத்தினால் தீர்வு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அந்தக் கோயில்கள் என்னென்ன? * சென்னை பாடி வலிதாயநாதர் கோயில் *தஞ்சை வசிஷ்டேஸ்வரர் கோயில் *திருவாரூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் * மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் *சிவகங்கை பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில் * திருச்செந்தூர் முருகன் கோயில்.

News May 17, 2024

நாளையுடன் மொயின் அலி ஐபிஎல்லில் இருந்து விலகல்

image

CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் பிறகு, CSK வீரர் மொயின் அலி டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக நாடு திரும்ப உள்ளார். ஒருவேளை, நாளைய போட்டியில் CSK அணி வெற்றி பெற்று ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டால், அவர் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ஏற்கெனவே, பதிரனா, தீபக் சாஹர், முஸ்தஃபிசூர் ஆகியோர் அணியில் இல்லை.

News May 17, 2024

4 கட்ட தேர்தலில் 45 கோடி பேர் வாக்களிப்பு

image

4 கட்ட தேர்தலில் இதுவரை 45 கோடி பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 23 மாநிலங்களை உள்ளடக்கிய 379 தொகுதிகளில் இதுவரை தேர்தல் நடைபெற்றுள்ளதாகவும், அதில் 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. விரைவில் மேலும் 3 கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

News May 17, 2024

மும்பை – லக்னோ அணிகள் இன்று மோதல்

image

ஐபிஎல் தொடரில் மும்பை – லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன. மும்பை இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 12 புள்ளிகள் பெற்றுள்ளது. கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ஏற்கெனவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!