News May 2, 2024

பிரஜ்வால் வெளிநாடு செல்ல அனுமதி பெறவில்லை

image

பாலியல் புகாரில் சிக்கிய எம்.பி பிரஜ்வால் வெளிநாடு செல்ல அனுமதி பெறவில்லையென வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. ம.ஜ.த வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் ஜெர்மனிக்கு தப்பியோடியுள்ளார். இது குறித்து வெளியுறவு அமைச்சகம், ‘ராஜாங்க பாஸ்போர்ட் வைத்துள்ளதால் அவருக்கு ஜெர்மனி செல்ல விசா தேவையில்லை. பிரஜ்வாலின் பாஸ்போர்ட்டை முடக்க நீதிமன்றம் இதுவரை உத்தரவிடவில்லை’ என விளக்கமளித்துள்ளது.

News May 2, 2024

EVM வைக்கப்பட்டுள்ள பகுதிகள் Red Zoneஆக அறிவிப்பு

image

சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை Red ஆகக் காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதைத் தடுக்க EVM வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது டிரோன் பறக்கத் தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகப் பகுதிகளை Red Zoneஆக அறிவித்து, அவற்றின் மீது டிரோன் பறப்பதற்குக் காவல் ஆணையர் தடை விதித்துள்ளார்.

News May 2, 2024

கேப்டன் பதவி யாருக்கும் நிலையானது அல்ல

image

மற்றொருவர் தலைமையில் விளையாடுவது தனக்குப் புதிதல்ல என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுவது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “பல கேப்டன்களின் கீழ் விளையாடி இருக்கிறேன், அதைக் கடந்த ஒரு மாதமாக மீண்டும் செய்ய முயற்சித்தேன்” எனக் கூறினார். மேலும், கேப்டன் பொறுப்பு என்பது வந்து போகும், அது கிரிக்கெட் வாழ்வின் ஒரு பகுதி என்றும் தெரிவித்தார்.

News May 2, 2024

நல்ல கதை அமைந்தால் இருவரும் இணைவோம்

image

நல்ல கதை அமைந்தால் சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன் என ஜோதிகா தெரிவித்துள்ளார். சினிமா துறைக்கு வந்த பிறகு தான் சந்தித்த முதல் ஆள் சூர்யா தான் என்ற அவர், நீண்ட காலம் நண்பர்களாகவே இருந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகே திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். 1999இல் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இருவரும் முதன் முதலில் இணைந்து நடித்தார்கள். இருவரும் இணைந்து நடித்த படங்கள் ஹிட் அடித்தன.

News May 2, 2024

புற்றுநோய் பாதித்த நபருக்கு லாட்டரியில் ₹10,847 கோடி

image

அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு லாட்டரியில் ₹10,847 கோடி பரிசு கிடைத்துள்ளது. 46 வயதான செங் சேபன், கடந்த 8 ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். பவர்பால் ஜாக்பாட் லாட்டரி குலுக்கலில் அவருக்கு இந்திய மதிப்பில் ₹10,847 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதில் வரிப் பிடித்தம் போக அவருக்கு ₹3,500 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

DeepFake வீடியோ பரவுவதை தடுக்க முடியாது

image

மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது சமூக வலைத்தளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதைத் தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், சமூக வலைத்தளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாதெனக் கருத்து தெரிவித்த நீதிமன்றம், இது தொடர்பாக மே 6க்குள் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

News May 2, 2024

யூடியூபர் KGF விக்கி கைது

image

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல யூடியூபரும், துணிக் கடை ஓனருமான விக்கி (எ) விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். N.N.கார்டன் பகுதியில் KGF என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருபவர் விக்கி. இவரது கடையில் வேலை பார்த்த ரிஸ்வான் என்பவரை, கடந்த மாதம் ஆள் வைத்து தாக்கியதாகப் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விக்கியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் புழல் சிறையில் அடைத்தனர்.

News May 2, 2024

பிரிஜ்பூஷணுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு

image

மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட சர்ச்சையில் சிக்கிய எம்பி பிரிஜ்பூஷனுக்குப் பதிலாக அவரது மகனுக்கு மக்களவைத் தேர்தலில் பாஜக வாய்ப்பளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கெய்சர்கஞ்ச் தொகுதியில் பிரிஜ்பூஷண் மீண்டும் போட்டியிடலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பாஜக இம்முறை வாய்ப்பளிக்கவில்லை. அவருக்கு பதில், மகன் கரண்சிங் பூஷண் சிங்கை அறிவித்துள்ளது.

News May 2, 2024

கோலியை விட ஹர்திக் சிறப்பாக விளையாடக் கூடியவர்

image

கோலி, சூரியகுமாரை விட ஹர்திக் பாண்டியா சிறந்த வீரர் என்று முன்னாள் வீரர் முகம்மது கைப் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை அணிக்கு ஹர்திக் தேர்வு செய்யப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கைப் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்துக் கூறிய அவர், ஐசிசி போட்டிகளில் கோலி, சூரியகுமாரை விட ஹர்திக் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் எனத் தெரிவித்தார்.

News May 2, 2024

75 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பெண்ணின் முகம் இதுதான்!

image

சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனித இனம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு ஆப்பிரிக்காவில் தங்கி, நம்முடைய மனித இனமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது. மற்றொரு பிரிவு, ஆசியா, ஐரோப்பாவில் தங்கி நியாண்டர்தால்களாக மாறியது. இந்நிலையில், 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் குகையில் வாழ்ந்த நியாண்டர்தால் பெண்ணின் முகத்தை விஞ்ஞானிகள் தற்போது மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர்.

error: Content is protected !!