India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் பிஹாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 31 முதல் 34 தொகுதிகளை வெல்லும் என்று நியூஸ் 18 நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 6 முதல் 9 தொகுதிகளை மட்டுமே வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, காஞ்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே.வங்கத்தில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 23-27 இடங்களை பெறும் என சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 13-17 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 1-3 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் வங்க தேசத்தை எதிர்த்து விளையாடி வருகிறது இந்தியா. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 53 ரன்களும் ஹர்திக் பாண்டியா 40 ரன்களும் எடுத்து அசத்தினர். தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, ஒடிஷாவில் உள்ள 21 தொகுதிகளில்,
பாஜக : 18 – 20 தொகுதிகள்
காங்கிரஸ் : 0 – 1 தொகுதி
பிஜேடி : 0 – 2 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
உ.பியில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 62-66 இடங்களை பெறும் என சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட INDIA கூட்டணி 15-17 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளில்,
பாஜக : 21 – 23 தொகுதிகள்
காங்கிரஸ் : 0
YSRCP : 2 – 4 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில்,
பாஜக : 21 தொகுதிகள்
திரிணாமுல் காங்கிரஸ் : 20 தொகுதிகள்
காங்கிரஸ் : 1 தொகுதி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று மம்தா பானர்ஜி உறுதியிட்டு கூறிவரும் நிலையில், பாஜக அதிக எம்.பி.க்களை வெல்லும் என்று நியூஸ் 18 கணித்துள்ளது. அம்மாநிலத்தில் பாஜக 21 முதல் 24 தொகுதிகளில் வெல்லும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் 18 முதல் 21 தொகுதிகளில் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெல்லாது என்று நியூஸ் 18 குறிப்பிட்டுள்ளது.
INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில்,
பாஜக : 11 – 12 தொகுதிகள்
காங்கிரஸ் : 4 – 6 தொகுதிகள்
BRS : 0 – 1 தொகுதி
மற்றவை : 0 – 1 தொகுதி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.