News June 1, 2024

வங்க தேசத்துக்கு 183 ரன்கள் இலக்கு

image

டி20 உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் வங்க தேசத்தை எதிர்த்து விளையாடி வருகிறது இந்தியா. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 53 ரன்களும் ஹர்திக் பாண்டியா 40 ரன்களும் எடுத்து அசத்தினர். தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

Similar News

News July 10, 2025

மோடிக்கு நாட்டின் உயரிய விருதை வழங்கிய நமீபியா

image

நமீபியா குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘வெல்விட்சியா மிரபலீஸ்’ விருது PM மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. உலக அமைதி, சமூக பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக மோடிக்கு இவ்விருதை நமீபியா வழங்கியுள்ளது. உயரிய விருது தனக்கு வழங்கப்பட்டதை பெருமையாக கருதுவதாக மோடி தெரிவித்தார். சர்வதேச நாடுகளிடம் இருந்து அவருக்கு கிடைக்கும் 27-வது விருது என்பது குறிப்பிடத்தக்கது.

News July 10, 2025

மரண தண்டனையில் இருந்து தப்ப என்ன வழி?

image

கொலைக் குற்றச்சாட்டில் ஏமன் சிறையில் உள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு வரும் <<16997656>>16-ம் தேதி மரண தண்டனை<<>> நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில், கொலையானவரின் குடும்பத்தினர் மன்னிப்பு அளித்தால் மட்டுமே இவர் உயிர் பிழைக்கலாம். இதற்காக கொலையானவரின் சகோதரருக்கு இழப்பீடாக 1 மில்லியன் டாலர் பணம், சவுதி (அ) UAE-யில் நிரந்தர வசிப்பிடம் வழங்க மனித உரிமை அமைப்புகள் இந்திய அரசு உதவியுடன் முயற்சித்து வருகின்றன.

News July 10, 2025

டிரம்ப் வரி விதிப்பு பட்டியல்.. இந்தியாவின் பெயர் இல்லை

image

கூடுதல் வரி விதிக்கப் போவதாக கூறி டிரம்ப் வெளியிட்டுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை. அதில், 20 நாடுகளின் பெயர்கள் உள்ளன. அதாவது, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம், இந்தோனேசியா, தெ.ஆப்பிரிக்கா, போஸ்னியா, கம்போடியா, கஜகஸ்தான், லாவோஸ், ஹெர்சிகோவினா, செர்பியா, துனிசியா உள்ளிட்ட நாடுகளின் பெயர்கள் உள்ளன. இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தக உடன்பாடு செய்யவுள்ளது.

error: Content is protected !!