News May 9, 2024

அக்னி நட்சத்திர காலத்தில் கிரக பிரவேசம் செய்யலாமா?

image

அக்னி நட்சத்திர காலத்தில் திருமணத்துக்கு வரன் தேடுவது, நிச்சயதார்த்தம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகளை செய்யலாம். வளைகாப்பு தள்ளிப் போட வேண்டிய அவசியமில்லை. வீடு மாற நினைத்தால் வாடகை வீட்டிற்கு தாராளமாக மாறலாம். தொழில் தொடர்பான கட்டுமானப் பணிகளை தொடங்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் மொட்டை அடித்து காது குத்தக் கூடாது. அக்னி நட்சத்திர காலத்தில் சொந்த வீட்டிற்கு குடிபோக கூடாது.

News May 9, 2024

புதிய கதைக்களத்துடன் வரும் படைப்புகள் நிச்சயம் வெல்லும்

image

புதிய கதைக்களத்துடன் வரும் படைப்புகள் எல்லாம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை தனக்கு அதிகரித்துள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு போன்ற மலையாளப் படங்களின் கதை அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ‘சச்சின்’ படத்தை ரீரிலீஸ் செய்ய இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

News May 9, 2024

நாய் வளர்க்க தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு

image

ராட் வீலர், பிட்புல் உள்ளிட்ட 23 வகை நாய்களை வளர்க்கவும், இனப்பெருக்கம் செய்யவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 23 வகை நாய்களை பட்டியலிட்டு, அதை வளர்க்க மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களும் தடை விதித்து வருகின்றன. அந்த வரிசையில் தமிழ்நாடு அரசும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் 23 வகை நாய்களை வளர்ப்பது குற்றமென கூறப்பட்டுள்ளது.

News May 9, 2024

வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

image

சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதில் அங்கு பணிபுரிந்த 5 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

News May 9, 2024

திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது

image

திருச்செந்தூரில் பல அடி தூரத்திற்கு கடல் திடீரென உள்வாங்கியுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பகுதிகளை ஓட்டிய கடல் பகுதிகளில் இன்று பல அடி தூரத்திற்கு நீர் உள்வாங்கியுள்ளது. இதனால் கடலில் இருக்கும் பாறைகள் வெளியே லேசாகத் தெரிகின்றன. இதையடுத்து திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பக்தர்கள், கடல் உள்வாங்கியதை ஆச்சரியத்துடன் புகைப்படம் எடுத்துச் சென்ற வண்ணம் இருந்தனர்.

News May 9, 2024

15 மாவட்டங்களில் இடி மின்னனலுடன் மழை

image

15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும், இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

News May 9, 2024

பைனலில் இந்தியாவுடன் வெஸ்ட் இண்டீஸ் மோதும்!

image

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா கணித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “இந்திய அணியின் தேர்வு சில சர்ச்சைகளைக் கண்டு வருகிறது. இருப்பினும், அவர்களிடம் நிறைய நட்சத்திர வீரர்களைக் கொண்டுள்ள அந்த அணி, உலகக் கோப்பைத் தொடரின் டாப் 4 அணிகளில் ஒன்றாக இருக்கும்” எனக் கூறினார்.

News May 9, 2024

சமூக விரோதிகளின் அரசு அமைவதை தடுக்க வேண்டும்!

image

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஓபிசி & சிறுபான்மையின மக்கள் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அரம்பாக் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவினர் மக்களிடம் ₹5,000 – ₹15,000 வரை பணம் கொடுத்து வாக்குகளை வாங்குகிறார்கள். சமூக விரோதிகள், பயங்கரவாத அரசை அமைப்பதை தடுக்க வேண்டும் என்றால், பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது” எனக் கூறினார்.

News May 9, 2024

அமெரிக்காவில் இந்திய மாணவர் மாயம்

image

அமெரிக்காவில் உயர் கல்வி படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் படித்து வந்த இந்திய மாணவர் ரூபேஷ் சந்திராவை கடந்த 2ஆம் தேதி முதல் காணவில்லை. ஒரு வாரமாக எந்தவித துப்பும் கிடைக்காததால், அந்நாட்டு போலீசார் திணறி வருகின்றனர்.

News May 9, 2024

சென்செக்ஸ் 1,062 புள்ளிகள் சரிவு

image

காலையில் உயர்வுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் மாலையில் பெரும் சரிவைச் சந்தித்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 1,062 புள்ளிகள் சரிந்து 72,404 புள்ளிகளுடனும், நிஃப்டி 345 புள்ளிகள் சரிந்து 21,957 புள்ளிகளுடனும் வர்த்தகத்தைப் பதிவுசெய்துள்ளது. L&T 5%, பாரத் பெட்ரோலியம் 4.5%, கோல் இந்தியா 4.4% வீழ்ச்சியடைந்ததால் ₹8 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!