News June 7, 2024
2ஆவது முறையாக நடைபெற்ற சூப்பர் ஓவர்

நடப்பு உலகக் கோப்பை டி20 தொடரில் 11 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இதுவரை 2 முறை சூப்பர் ஓவர் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3இல் ஓமன் – நமீபியா அணிகள் மோதின. இந்தப் போட்டி டிரா ஆனதால், சூப்பர் ஓவர் வீசப்பட்ட நிலையில், நமீபியா அணி வென்றது. இதேபோல, இன்று பாகிஸ்தான் – அமெரிக்கா அணிகள் மோதியப் போட்டி டிரா ஆன நிலையில், சூப்பர் ஓவரில் USA அபார வெற்றி பெற்றது.
Similar News
News July 9, 2025
மாடுகளுடன் மாநாடு! பணிகளை ஆய்வு செய்த சீமான்

ஆடு, மாடுகளிடம் குறைகளை கேட்டறிந்து அரசிடம் சொல்லப்படும் என்பது போல் <<16951728>>ஒரு மாநாட்டை<<>> சீமான் நடத்த உள்ளார். மதுரை விராதனூர் பகுதியில் மாநாடு நாளை மாலை நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும் இடத்தில் சுற்றி இரும்பு வேலிகள் அமைத்து, அதற்கு முன்பாக ஒரு மேடை போடப்பட்டு அதில் சீமான் பேச உள்ளார். இந்நிலையில் மைக்கில் பேசி மாடுகள் மிரளுகின்றதா என சீமான் நேரில் ஆய்வு செய்தார்.
News July 9, 2025
சர்வதேச சந்தையில் சரியும் தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கம் விலை இன்று (ஜூலை 9) ஒரே நாளில் 42 டாலர்கள்(₹3,606) சரிந்து 3,254 டாலருக்கு விற்பனையாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை சரிவு, இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் மாறாததே <<17001872>>தங்கம் விலை இன்று<<>> குறையக் காரணம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலக சந்தையில் இதே நிலை நீடித்தால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் சரியுமாம்.
News July 9, 2025
காதலியை ஐபிஎஸ் ஆக்க இப்படி ஒரு வழியா?

வடமாநிலங்களில் வேண்டுதலுக்காக பக்தர்கள் கங்கை நீர் காவடி சுமக்கும் வழக்கம் உண்டு. அப்படி ஹரித்துவாரில், காவடியில் இருபுறமும் கங்கை நீரை சுமந்துகொண்டு வந்த இளைஞர் கவனம் ஈர்த்துள்ளார். அவரின் வேண்டுதல் என்ன தெரியுமா? அவரின் காதலி இப்போதுதான் பிளஸ் டூ முடித்துள்ளாராம். அவர் படித்து ஐபிஎஸ் ஆகும்வரை கங்கை காவடி தூக்குவதாக வேண்டுதலாம். ஐபிஎஸ் ஆனபின் அப்பெண்ணை கல்யாணம் செய்துகொள்வாராம்.