News May 10, 2024

சவுக்கு சங்கர் மீண்டும் கைது

image

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ-வின் ஆவணங்களை போலியாகத் தயாரித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் 6ஆவது முறை கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி, போலி ஆவணங்கள் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சைபர் கிரைம் போலீசார் ஏற்கெனவே 2 வழக்குகள் பதிந்து கைது செய்துள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.

News May 10, 2024

புரோட்டீன் பவுடர் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம்

image

உடல் எடையைக் கூட்டுவதற்காக புரதச்சத்து பவுடர்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, அதிக உப்பு, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்க வேண்டும் எனவும், உணவு லேபிள்களில் உள்ள தகவல்களைப் படிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. புரதச்சத்து பொடிகளை தொடர்ந்து உட்கொள்வது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம் என எச்சரித்துள்ளது.

News May 10, 2024

தங்கம் விலை ஒரே நாளில் 3ஆவது முறையாக உயர்வு

image

அட்சய திருதியையொட்டி ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் 3ஆவது முறையாக உயர்ந்துள்ளது. காலையில், முதலில் சவரனுக்கு ₹360 உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 2ஆவது முறையாக மீண்டும் ₹360 அதிகரித்தது. இதைத் தொடர்ந்து 3ஆவது முறையாக ₹520 உயர்ந்துள்ளது. இதனால், சென்னையில் 1 சவரன் தங்கம் விலை ₹54,160ஆக விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரே நாளில் ₹1,240 உயர்ந்துள்ளது.

News May 10, 2024

எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறதா வெப் சீரிஸ்?

image

உ.பி.யின் நொய்டாவில் வெப் சீரிஸ் பார்த்து ஓட்டல் உரிமையாளரின் 15 வயது மகனை முன் விரோதத்தால் கடத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில், மருத்துவ மாணவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு முன்னதாக, குஜராத்தில் டிவி சீரியல் பார்த்து 13 வயது சிறுவன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், வெப் தொடர்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது.

News May 10, 2024

என் வாழ்வின் சிறந்த தருணம்: இளன்

image

தனது தந்தையின் நீண்டநாள் கனவு நிறைவேறியுள்ளதாக நடிகர் பாண்டியனின் மகனும், ‘ஸ்டார்’ பட இயக்குநருமான இளன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இப்படத்தில் தனது அப்பா திரையில் தோன்றியபோது அரங்கம் அதிர ஒலித்த கைத்தட்டலால் இன்றைய நாள் தனக்கு சிறப்பாக அமைந்ததாகக் கூறியுள்ளார். தன் வாழ்வில் எப்போதும் இது சிறந்த தருணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

News May 10, 2024

எழுதித் தருகிறேன், உ.பியில் பாஜக படுதோல்வி அடையும்

image

உ.பியில் பாஜக படுதோல்வி அடையும் என தான் எழுதித் தருவதாக ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாடு முழுவதும் பாஜகவின் தோல்விக்கு உ.பி தான் வழிகாட்டப் போவதாகவும், இங்கு INDIA கூட்டணி மற்றும் அகிலேஷ் யாதவுக்குதான் வெற்றி என்றும் தெரிவித்தார். மேலும், தோல்வியில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அம்பானி, அதானியிடம் மோடி மன்றாடுவதாகவும் அவர் விமர்சித்தார்.

News May 10, 2024

கர்ப்பிணி உயிரிழந்தது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம்

image

கொல்லம் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது, ரயிலின் அபாய சங்கிலி செயல்படவில்லை என அப்பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே நிர்வாகம், ரயிலில் எந்தவித தொழில்நுட்ப கோளாறும் கண்டறியப்படவில்லை எனவும், அனைத்து பெட்டிகளிலும் அபாய சங்கிலி முழுமையாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

News May 10, 2024

ஜூன் 2இல் கெஜ்ரிவால் சரணடைய உத்தரவு

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 2இல் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக பொதுவெளியில் எதுவும் பேசக்கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது. ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டாலும், முதலமைச்சருக்கான பணியில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து, இன்று இரவு அல்லது நாளை சிறையில் இருந்து அவர் வெளியில் வருவார் எனத் தெரிகிறது.

News May 10, 2024

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா கெஜ்ரிவால்?

image

கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ள நிலையில், பாஜகவுக்கு அவர் கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி வலுவாக உள்ள டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று காய் நகர்த்தி வந்த நிலையில், இந்த ஜாமின் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் மே 25இல் தேர்தல் நடைபெற உள்ளது.

News May 10, 2024

‘ஸ்டார்’ படத்தின் திரைவிமர்சனம்

image

நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், சினிமாவில் நடிகனாக, ஸ்டாராக கோலாச்சினானா? என்பதே ‘ஸ்டார்’ படத்தின் கதை. கவினின் அசாதாரண நடிப்பும், யுவனின் இசையும் படத்திற்கு இரு தூண்கள். ஒரு சில காட்சிகளில் ஆங்காங்கே தொய்வுகள் இருந்தாலும், திரைக்கதை படத்தின் வேகத்தை குறைக்கவில்லை. காதல், கண்ணீர், வேதனை, பாசம் என அனைத்து எமோஷன்களும் இதில் உள்ளது. Way2News Rating: 2.5/5

error: Content is protected !!