News May 15, 2024

கட்டணத்தை ₹1000ஆக குறைத்தது அரசு

image

தற்போதைய நடைமுறையின்படி, நிலம் அல்லது வீட்டினை கிரையம் செய்துவிட்டால் அதனை ரத்து செய்ய மீண்டும் 9% முத்திரைத்தாள் வரி செலுத்த வேண்டும். அல்லது, ₹50 செலுத்தினால் கிரையம் ரத்து என்று முத்திரை மட்டும் குத்தப்படும். இந்த முறையை எளிதாக்க ₹1000க்கு புதிய முறையை பத்திரப் பதிவுத்துறை கொண்டுவந்துள்ளது. அதன்படி, இனி ₹1000க்கு கிரையத்தை ரத்து செய்து புதிய பத்திரங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

News May 15, 2024

நீண்ட ஆயுளுக்கான உணவு ரகசியம்

image

ஜப்பானில் உள்ள தீவுகளில் நீண்ட காலம் வாழ்பவர்களின் உணவுப் பழக்கம் குறித்த ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, 100 வயதைக் கடந்தவர்கள் உட்கொள்ளும் 90% உணவுகள், அவர்களின் வீட்டுக்கு 10 கி.மீ. சுற்றளவில் கிடைப்பவையாக உள்ளன. கிழங்குகள், காய்கறிகள், தானியங்களை அதிகம் உட்கொள்கின்றனர். மீன், செம்மறி ஆட்டுப்பால், வாரத்திற்கு 3 முட்டை சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

News May 15, 2024

ராஜஸ்தான் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்தது

image

ராஜஸ்தான், ஜுன்ஜுனு பகுதியில் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சுரங்கம் இயங்கி வருகிறது. நேற்றிரவு இந்த சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்துவிழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 2000 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் லிஃப்டுக்குள் 14 பேர் சிக்கியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சுரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News May 15, 2024

‘சூர்யா 44’ படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடக்கம்

image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் 40 நாள்கள் நடைபெற உள்ளது என்றும், 2ஆம் கட்ட படப்பிடிப்பை ஊட்டியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இது சூர்யாவின் 44ஆவது படமாகும். அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.

News May 15, 2024

பகலில் கட்டுமானப் பணிக்கு தடை இல்லை

image

கட்டுமானப் பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விலக்கியிருக்கிறது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்நிலையில், வெயிலின் தாக்கம் குறைந்திருப்பதால் தடை நீக்கப்பட்டதாக அதிகாலையிலேயே அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

News May 15, 2024

நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை

image

ஆந்திரா தேர்தலின்போது முன்னணி நடிகர்களான ராம் சரண், அல்லு அர்ஜூன் பிரசாரத்தில் ஈடுபட்டது பேசுபொருளாக மாறியது. இது குறித்து விளக்கம் அளித்த அல்லு அர்ஜூன், தனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ளார். நடுநிலையாக மக்கள் பக்கம் நிற்பதாகக் கூறிய அவர், தனது நண்பர் ஷில்பா ரவி ரெட்டி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக தெளிவுபடுத்தியுள்ளார்.

News May 15, 2024

CSKvsRCB இடையே வாழ்வா சாவா போட்டி

image

CSK-RCB இடையேயான நாக் அவுட் ஐபிஎல் போட்டி, வரும் மே 18ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே, ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை பெறும். ஏனெனில், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் ஏற்கெனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததால், இன்னும் 1 போட்டியில் வென்றால் கூட ஹைதராபாத் அணியும் தங்களது ப்ளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விடும்.

News May 15, 2024

பாஜக வேட்பாளருக்கு ₹313 கோடி சொத்து

image

ஒடிஷாவில் சட்டசபை தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. அதில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக நிர்வாகியுமான திலீப் ராய் போட்டியிடுகிறார். அவரது சொத்து மதிப்பு மொத்தம் ₹313 கோடி என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

News May 15, 2024

Play Off சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

image

நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் 2ஆவது அணியாக தேர்வாகியுள்ளது. டெல்லி-லக்னோவுக்கு இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெல்லி அணி ப்ளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. இதனால் புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. ஆனால், எத்தனையாவது இடம் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

News May 15, 2024

சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்த மோடி

image

தான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் அரசியலை நாடுவதில்லை என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவரிடம், முஸ்லிம்களை குறிவைத்து ஊடுருவல்காரர்கள், அதிக குழந்தைகள் கொண்டவர்கள் என பேசினீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தான் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைத்து பேசவில்லை எனத் தெரிவித்தார். முன்னதாக, ராஜஸ்தானில் அவரது பேச்சு சர்ச்சையானது.

error: Content is protected !!