News May 15, 2024
ராஜஸ்தான் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்தது

ராஜஸ்தான், ஜுன்ஜுனு பகுதியில் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சுரங்கம் இயங்கி வருகிறது. நேற்றிரவு இந்த சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்துவிழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 2000 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் லிஃப்டுக்குள் 14 பேர் சிக்கியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சுரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 16, 2025
விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாடவுள்ள PM மோடி

ஜனவரியில் PM மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் அவர், நயினாரின் யாத்திரை நிறைவு விழாவிலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பூந்தமல்லி – போரூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை அடுத்த மாதம் PM மோடி தொடங்கி வைக்கவுள்ளாராம். இந்நிகழ்ச்சியில் CM ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
News December 16, 2025
தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

வரும் 18-ம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பங்கேற்கும் தவெக தொண்டர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. *குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவர். *கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்களுக்கு அனுமதி இல்லை. *விஜய்யின் வாகனத்தை பின் தொடர கூடாது. *மரங்கள், மின் கம்பங்களில் ஏறக்கூடாது. *உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது.
News December 16, 2025
18-ம் தேதி சுழன்று அடிக்க உள்ள ‘தளபதி புயல்’

‘ஜனநாயகன்’ படத்தின் 2-ஆவது பாடல் வரும் 18-ம் தேதி வெளியாக உள்ளது. நேற்று வரையிலான பேரமைதி, 18-ம் தேதி பெரும் புயலுக்கான முன்னோட்டம் என குறிப்பிட்டு, தயாரிப்பு நிறுவனம் இதை அறிவித்துள்ளது. ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நடைபெறும் அதே நாளில், இப்பாடல் வெளியாக உள்ளது. முன்னதாக, இப்படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ சமீபத்தில் வெளியாகி, பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.


