News May 15, 2024

நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி மோசடி (3)

image

இந்த மோசடி தொடர்பாக 2020இல் ராணா கபூர், தீரஜ் வதாவனை ED கைது செய்தது. தொடர்ந்து, 2022இல் சிபிஐ தீரஜை கைது செய்ய, அவர் சிறையிலேயே சொகுசாக வாழ்வதாகவும், உடல்நிலையை காரணம் காட்டி நாள் கணக்கில் மருத்துவமனையிலேயே தங்கி இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2023ல் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளியில் வந்த அவரை, உச்சநீதிமன்றம் சென்று மீண்டும் கைது செய்ய சிபிஐ அனுமதி பெற்றது.

News May 15, 2024

நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி மோசடி (2)

image

அதற்கு கைமாறாக யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூருக்கு ₹40 கோடி மதிப்பிலான நிலத்திற்கு ₹600 கோடி DHFL கடன் வழங்கியுள்ளது. அதேபோல், யெஸ் வங்கியிலிருந்து BRPL நிறுவனத்தின் பெயரில் ₹1,700 கோடி கடன் பெறும் திட்டத்தையும் DHFL முன்வைத்திருந்தது. இப்படி, போலி நிறுவனங்களின் பெயரிலும், தரமற்ற சொத்துக்களை அடமானம் வைத்தும் பல கோடி மோசடிகளை DHFL அரங்கேற்றி வந்தது சிபிஐ, ED விசாரணையில் தெரியவந்தது.

News May 15, 2024

நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி மோசடி (1)

image

மும்பையை சேர்ந்த தீரஜ், கபில் வதாவன் சகோதரர்கள் DHFL நிதி நிறுவன இயக்குநர்களாக இருந்தபோது, 17 வங்கிகளில் ₹34,000 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 2019ல் எழுந்த இப்புகார் குறித்து சிபிஐ, ED நீண்ட விசாரணை நடத்தியது. அதில், 2018ஆம் ஆண்டில் DHFL-ன் குறுகிய காலக் கடன் பத்திரங்களில் யெஸ் பேங்க் ₹3,700 கோடி முதலீடு செய்ததன் மூலம் இம்மோசடி வடிவம் பெறத் தொடங்கியது தெரியவந்தது.

News May 15, 2024

ஆறு, குளம், ஏரிகளுக்குச் செல்ல வேண்டாம்

image

தேனி, தென்காசி. விருதுநகர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரித்துள்ள மாவட்ட நிர்வாகம் கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கும் என்பதால் நடந்து செல்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 15, 2024

நமது அணுகுண்டுகள் ஃபிரிட்ஜில் வைப்பதற்கா?: யோகி

image

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை பிரதமர் வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஹமிர்பூரில் பிரசாரம் செய்த அவர், மோடி ஆட்சியில் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதாகக் கூறினார். மேலும், பாகிஸ்தான் அணுகுண்டு வைத்திருப்பதாக காங்., மிரட்டுவதாக கூறிய அவர், நம்மிடம் இருக்கும் அணுகுண்டுகள் ஃபிரிட்ஜில் வைத்திருப்பதற்காகவா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News May 15, 2024

இதனால்தான் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது: அமித்ஷா

image

தோல்வி உறுதியானதால், காங்கிரஸ் ஆதரவாளர்கள் வாக்களிக்க விரும்பாமல், தேர்தலைப் புறக்கணித்ததால்தான் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையை அளிக்கிறது. காந்திநகரின் களநிலவரங்களை பாஜகவினரிடம் கேட்டறிந்தபோது, பல சந்தேகங்கள் நீங்கின. NDA கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும்” என்றார்.

News May 15, 2024

தமிழக அரசை பாராட்டிய நீதிமன்றம்

image

போதைப்பொருள் தொடர்பான வழக்கில் குஜராத், உ.பி, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா வருவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், தமிழகத்தில்தான் மாவட்ட வாரியாக உதவி ஆணையர் தலைமையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறியது. அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, போதைப் பொருளைத் தடுக்க காவல்துறைக்கு உரிய பயிற்சி வழங்க பரிந்துரைத்தது.

News May 15, 2024

டெங்கு பாதிப்பு தடுப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவு

image

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட அளவிலான செயல்திட்டத்தை கடைபிடிக்குமாறு, மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர், தி.மலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சையில் பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து நாள்தோறும் தகவலைப் பெற்று, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News May 15, 2024

டி20 உலகக் கோப்பையை இலவசமாகப் பாருங்கள்!

image

டி20 உலகக் கோப்பைத் தொடரை இலவசமாக ஒளிபரப்பவுள்ளதாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாலிவுட் ஹீரோ கார்த்திக் ஆர்யனின் படத்துடன் கூடிய சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ‘மொபைலில் ஒவ்வொரு போட்டியின், ஒவ்வொரு பந்தையும் இலவசமாகப் பார்க்கலாம்’ என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது. முன்னதாக, 50 ஒவர் உலகக் கோப்பையை ஹாட்ஸ்டார் இலவசமாக ஒளிபரப்பியது.

News May 15, 2024

கோமாவில் இருந்த மாணவர் +2 தேர்வில் சாதனை

image

2 ஆண்டுகளுக்கு முன் கோமாவில் இருந்த மாணவர் CBSE +2 தேர்வில் 93% மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். டெல்லியைச் சேர்ந்த மாதவ், 2021இல் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் கோமாவுக்கு சென்றார். அவரது மூளையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டு பேச்சு, புரிதல், எழுத்து போன்ற முக்கிய செயல்பாடுகள் முடங்கின. இந்நிலையில், அறுவைச் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவர், +2 தேர்வில் சாதித்துள்ளார்.

error: Content is protected !!