India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்தியில் INDIA கூட்டணி ஆட்சிக்கு அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ஆதிர் ரஞ்சன் தலைமையிலான பெங்கால் காங்கிரஸ் & சிபிஎம் ஆகியவை பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளன. பாஜகவால் 200 இடங்களைக் கூட எட்ட முடியாது. அவர்களுடன் மறைமுகமாக கூட்டணி வைத்திருப்பவர்களை மக்கள் இந்த தேர்தலில் பாடம் புகட்ட தயாராகிவிட்டனர்” எனக் கூறினார்.
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கவுன்சிலிங் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு, அடுத்த 2 நாட்களில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாளுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடையும் நிலையில், அதைத் தொடர்ந்து கவுன்சிலிங் நடைபெறும் தேதியை பள்ளிக் கல்வித்துறை வெளியிடும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ரியான் பராக் (48), அஸ்வின் (28) மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து பஞ்சாப் அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PBKS தரப்பில் ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியா பலவீனமான நாடு அல்ல, உலகின் சக்திவாய்ந்த நாடாக மாறிவிட்டது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும் என பலர் தவறான கருத்துக்களை பரப்ப முயற்சிக்கின்றனர் என எதிர்கட்சிகளை விமர்சித்தார். மேலும், பாஜக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் என்றும், எப்போதும் இடஒதுக்கீட்டை நிறுத்த மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.
மகளிர் உரிமைத் தொகை ₹1000 இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதி இருந்தும் சிலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களது விவரம் குறித்து தமிழக அரசு ஏற்கெனவே விண்ணப்பங்களைப் பெற்றுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் விடுபட்டவர்களுக்கு ₹1000 கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, விடுபட்ட தங்களுக்கு பணம் கிடைக்க செய்யுமாறு தமிழக அரசுக்கு பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கரும், அவரை பேட்டியெடுத்ததாக REDPIX யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேச்சில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், அந்த காணொளியால் பெண் காவலர்கள் வருத்தமடைந்துள்ளதால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் REDPIX நிறுவனம் அறிவித்துள்ளது.
திமுகவை மறுசீரமைக்கும் தீவிர பணிகளில் அமைச்சர் உதயநிதி ஈடுபட்டிருப்பதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தல் முடிந்த கையோடு, தமிழகம் முழுவதும் இருந்து கோஷ்டி பூசல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பல புகார்கள் திமுக தலைமையிடம் வந்து குவிந்தன. இது தொடர்பாக விசாரணையை முடுக்கிவிட்ட அவர், கட்சி & ஆட்சி நிர்வாகத்தில் பெரும் களையெடுப்புகளை மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.
சுலோவேகியா நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோ (59) இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென பிகோவை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டதில், அவருக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மர்மநபரை கைது செய்த காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்னிவீர் போன்ற திட்டங்களை ரத்து செய்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியிடம் முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ரேபரேலியில் முடி திருத்தும் கடை ஒன்றில் சவரம் செய்து கொண்டு பிரச்சாரம் செய்த அவர், ரேபரேலியில் உள்ள உங்களைப் போலவே நாடு முழுவதும் திறமையான பலர் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை காங்கிரஸ் உருவாக்கித் தரும் என உறுதியளித்தார்.
சாகசப் பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்காக இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் டுகாட்டி நிறுவனம் டெசர்ட் X என்ற புதிய மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான 48 மி.மீ. யு.எஸ்.டி. போர்க், ஸ்போக்ஸ் சக்கரங்கள், 937 சி.சி. லிக்விட் கூல்டு என்ஜின், 110 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும் இதன் விலை ₹24 லட்சமாகும். இதில் 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.
Sorry, no posts matched your criteria.