News May 16, 2024

மாற்றத்தை உணர அதிகாலையில் எழுங்கள்..!

image

அதிகாலையில் கண் விழிப்பதும், இரவு சீக்கிரம் உறங்குவதும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. சூரிய உதயத்திற்கு முன் எழுவதால், மூளை நரம்புகள் சீராகச் செயல்படும். இதனால், தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிப்பதோடு, மன அழுத்தம், ரத்த அழுத்தம் குறையும். அந்நாளை சிறப்பாக திட்டமிட அதிக நேரம் கிடைக்கும் என்பதால், உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் ஒதுக்க முடியும்.

News May 16, 2024

தொல்லைகள் நீக்கும் திருத்தணி முருகன்

image

முருகனின் ஐந்தாம் படை வீடு திருத்தணி. சூரபத்மனை வதம் செய்த பிறகும் கோபம் தணியாத முருகப்பெருமான் திருத்தணிக்கு சென்று தன் கோபத்தைத் தணித்துக் கொண்டதாக ஐதிகம். மேலும், இங்குதான் பிள்ளையாரின் உதவியுடன் வேடர் குலத்தில் பிறந்த வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்டார். திருத்தணி முருகனை வழிபட்டால், தங்கள் மனங்களில் அசுர குணம் தலையெடுக்காது. வாழ்க்கையில் தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.

News May 16, 2024

விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

image

சென்னை அருகே நடந்த விபத்தில் நேற்று 9 பேர், இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் அதிகாலையில் நிகழும் விபத்து அதிகரித்துள்ளன. அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி விபத்தை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஓட்டுநர்களும் வாகனங்களை எச்ச்சரிக்கையாக இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 16, 2024

ஹைதராபாத் – குஜராத் அணிகள் இன்று மோதல்

image

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் – குஜராத் அணிகள் இன்று மோதுகின்றன. ஹைதராபாத் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய போட்டியில் வென்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். குஜராத் 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 11 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

News May 16, 2024

BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி

image

சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

News May 16, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ நாட்டில் 70 கோடி பேருக்கு வேலை இல்லை – பிரியங்கா காந்தி
➤ காங்கிரஸ் அகற்றப்பட வேண்டிய கட்சி – பிரதமர் மோடி
➤ INDIA கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் – கார்கே
➤ சபரிமலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம்
➤ பாண்டியாவின் திறமையை குறைத்து மதிப்பிடக்கூடாது – காம்பீர்

News May 16, 2024

INDIA கூட்டணிக்கு ஆதரவாக புயல் வீசுகிறது

image

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் INDIA கூட்டணிக்கு ஆதரவாக புயல் வீசுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக தனது பொய் தொழிற்சாலை மூலம் எவ்வளவு ஆறுதல்களை சொல்லிக்கொண்டாலும் எந்த மாற்றமும் ஏற்படாது என்று அவர், ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு மோடி பிரதமராக இருக்க மாட்டார் என்றார். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திலேயே பாஜக இந்த தேர்தலை எதிர்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

News May 16, 2024

ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை

image

ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2009இல் அமைச்சராக இருந்த போது வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணை செய்த நிலையில், தற்போது வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News May 16, 2024

சுரங்கத்தில் சிக்கிய 14 விஜிலென்ஸ் அதிகாரிகள் மீட்பு

image

ராஜஸ்தானில் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கத்தில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். சுரங்கத்தை ஆய்வு செய்ய சென்ற விஜிலென்ஸ் அதிகாரிகள் லிப்டில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு, பல அடி ஆழம் கொண்ட சுரங்கத்தில் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்டும் முயற்சி பல மணி நேரமாக நடைபெற்ற நிலையில், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒரு அதிகாரி சுரங்த்திற்குள்ளேயே பலியானார்.

News May 16, 2024

ராஜஸ்தானுக்கு பயத்தை காட்டிய சாம் கரன்

image

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய சாம் கரன் ஆட்டநாயகனாக தேர்வானார். சிறப்பாக பந்து வீசி ராஜஸ்தான் அணியின் 2 முக்கிய விக்கெட்டை வீழ்த்திய அவர், பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பினார். பஞ்சாப் வீரர்கள் அடுத்தடுத்த அவுட்டான நிலையிலும், நங்கூரம் போல நின்று, 63 ரன்களை குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். பஞ்சாப் அணி ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!