India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மங்கோலியாவில் பாரம்பரிய சின்னங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைப்பான யுனெஸ்கோவின் ஆசிய மற்றும் பசிபிக் உலகக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்தியாவின் ராமசரித மனாஸ், பஞ்சதந்திர கதைகளின் கையெழுத்து பிரதிகள் உள்ளிட்ட 20 பொருட்கள் பரிந்துரைக்கப்பட்டன. பின்னர், விவாதத்திற்கு பிறகு துளசி தாசர் எழுதிய ராமசரித மனாஸ், விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திர கதைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கியது.
சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் டிவி பெண் தொகுப்பாளரை மயக்கமருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். அவர் அளித்த புகாரில் “பூசாரி கார்த்திக் கொடுத்த கோயில் தீர்த்தத்தை குடித்ததுமே மயக்கமடைந்தேன். பிறகு, கண்விழித்து பார்த்தபோது நான் நிர்வாணமாக படுக்கையறையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக” குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திராவின் செகந்திராராபாத்தில் 1984 ஆகஸ்ட் 3ஆம் தேதி பிறந்தவர் சுனில் சேத்ரி. இந்திய ராணுவ முன்னாள் அதிகாரி சேத்ரியின் மகனான இவர், சிறு வயதில் கிரிட்கெட் மீது ஆர்வம் கொண்டவர். ஆனால், கிரிக்கெட் கிட் வாங்க காசு இல்லாமல் கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தினார். 2001இல் தாய்லாந்தில் நடைபெற்ற ‘ஆசிய ஸ்கூல் சாம்பியன்ஷிப்’ தொடரில் சேத்ரி ஸ்கோர் செய்த 4 கோல்கள் அவரது கெரியரில் திருப்புமுனையாக அமைந்தது.
ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மாலிவால் மீது அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் வைபவ் குமார் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம் ஆத்மி உறுதி அளித்துள்ளது. இந்நிலையில், வைபவ் குமாரை கெஜ்ரிவால் பாதுகாப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜகவினர், லக்னோ விமான நிலையத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் வைபவ் குமார் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
குவைத்துக்கு எதிரான போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவதாக, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அறிவித்துள்ளார். இந்தியாவில் கால்பந்தாட்ட ஹீரோவாக கருதப்பட்டவர் பைசுங் பூட்டியா. அவருக்கு பின்பு பலராலும் அறியப்படுபவர் சுனில் சேத்ரி. கால்பந்தாட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்று, தேசத்திற்கு பெருமை சேர்த்த இவர், இந்தியாவுக்காக 145 போட்டிகளில் விளையாடி 93 கோல்கள் அடித்துள்ளார்.
10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் விரைவில் உதவித்தொகை வழங்கவுள்ளார். கடந்த ஆண்டு தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தேர்வு செய்ததில் சில குளறுபடி ஏற்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு நடந்துவிடக் கூடாது என்பதால், மாவட்ட வாரியாக மாணவர்களை தேர்வு செய்ய இணையதள லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஸ்பெஷல் கிப்ட் கொடுக்கவுள்ளார்.
தமிழக வனப்பகுதிகளில் மே 23ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. முதல் நாளில் யானைகள் நேரடியாக எண்ணப்படும். இரண்டாம் நாள், யானைகளின் சானத்தைக் கொண்டு கணக்கிடப்படும். மூன்றாம் நாள், தண்ணீர் குடிக்க வரும் யானைகள் கணக்கிடப்படும். கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற கணக்கெடுப்பில், தமிழகத்தில் 2961 யானைகள் இருப்பது தெரியவந்தது.
25 ஆண்டுகளுக்கு பிறகு, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபு தேவா ‘ARRPD6’ என்ற பெயரிடப்படாத படத்தில் இணைந்துள்ளனர். மனோஜ் இயக்கும் இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ரஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்ட நகைச்சுவை பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனைப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் (பிற்பகல் 1 மணி வரை) இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், தி.மலை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி (39) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குவைத் அணிக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிப் போட்டிதான் தனது கடைசி என்றும் அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிறந்த அவர், இந்திய அணிக்காக முன்கள வீரராக விளையாடி வருகிறார். 2004ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச போட்டியை விளையாடிய சேத்ரி, 20 ஆண்டுகால ஓட்டத்துக்கு ஓய்வளித்திருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.